OUR CLIENTS
கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு!
கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு! Posted on 09-Jul-2018 கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு!

சென்னை, ஜுலை 9-

கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற் கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:&பல்கலைக் கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஊதியம் உயர்த்தப்படுகிறது.

இந்த சம்பள உயர்வு, 2016&ம் ஆண்டு ஜனவரி 1&ந் தேதியிட்டு அமல்படுத்தப்படும். கல்லூரி ஆசிரியர்களுக்கான ஓய்வு வயது 58 ஆகவும், பல்கலைக் கழக ஆசிரியர் களுக்கான ஓய்வு வயது 60 ஆகவும் நீடிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Label