OUR CLIENTS
ஆகஸ்ட் மாதம் 5 நாட்கள் ஏழுமலையானைத் தரிசிக்க முடியாதாம்!-தேவஸ்தானம் அறிவிப்பு!!
ஆகஸ்ட் மாதம் 5 நாட்கள் ஏழுமலையானைத் தரிசிக்க முடியாதாம்!-தேவஸ்தானம் அறிவிப்பு!! Posted on 09-Jul-2018 ஆகஸ்ட் மாதம் 5 நாட்கள் ஏழுமலையானைத் தரிசிக்க முடியாதாம்!-தேவஸ்தானம் அறிவிப்பு!!

திருமலை, ஜூலை 9-

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அஷ்டபந்தன பாலாலய மஹாசம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு 5 நாட்கள் தரிசன சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அஷ்டபந்தன பாலாலய மஹாசம்ப்ரோக்ஷணம் நடைபெறும். அதன்படி, இந்தாண்டு ஆகஸ்ட் 12&ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், நாளொன்றுக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் 5 நாட்கள் முழுவதுமாக தரிசனம் ரத்த செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.  இதனால், ஏற்கெனவே வரும் ஆகஸ்ட் 12 முதல் 16 வரை நடைபெறவிருந்த ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த நாட்களில் தரிசன சேவையும் முற்றிலும் ரத்து செய்யப்படுகின்றன. 

மேலும், ஜூலை 20-ம் தேதி முதல் அஷ்டபந்தன பாலாலய மஹாசம்ப்ரோக்ஷத்திற்காக பரகாமணி சேவை கல்யாண மண்டபத்தில் வைத்து மதியம் 2 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது.  ஆபரணங்கள் மற்றும் சிற்பம் பழுது பார்த்தல் போன்ற பணிகள் ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் முடிவடைகிறது.

மேலும், 44 ரிக் வேதர்களும், 100 வேத பாராணயம் செய்பவர்கள் மற்றும் பிரபஞ்ச பண்டிதர்கள், வேதம் பயிலும் மாணவர்களும் இந்த சம்ப்ரோக்ஷ விழாவில் பங்கேற்கின்றனர். ஆகஸ்ட் 17 முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Label