OUR CLIENTS
மத்திய அமைச்சர் சுஷ்மாவுடன் தென்கொரிய அதிபர் சந்திப்பு
மத்திய அமைச்சர் சுஷ்மாவுடன் தென்கொரிய அதிபர் சந்திப்பு Posted on 10-Jul-2018 மத்திய அமைச்சர் சுஷ்மாவுடன் தென்கொரிய அதிபர் சந்திப்பு

புதுடெல்லி, ஜுலை 10-

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபர் மூன் ஜே&இன் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் வரும் 11-ம் தேதிவரை இந்தியாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை டெல்லி வந்தடைந்த தென்கொரியா அதிபர் மூன் ஜே&இன் மற்றும் அவரது மனைவி மற்றும் அந்நாட்டின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் குழுவினரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் வரவேற்றார்.

இந்தியா மற்றும் தென் கொரியா இடையே வர்த்தகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது. தென் கொரிய வர்த்தக மந்திரி கிம் ஹியூன் சோங் மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி சுரேஷ் பிரபு ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதை தொடர்ந்து, வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜை நேற்று சந்தித்த மூன் ஜே-இன் இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப் படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

தென்கொரியா அதிபராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக இந்தியாவுக்கு வந்துள்ள மூன் ஜே&இன்&னுக்கு இன்று ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.  மாலை விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தும் தென்கொரியா அதிபர் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் சார்பில் தென்கொரியா அதிபருக்கு விருந்தளிக்கப்படுகிறது.

Label