OUR CLIENTS
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு!
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு! Posted on 11-Jul-2018 ஏர்செல் மேக்சிஸ் வழக்கு சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு!

புதுடெல்லி, ஜுலை 11-

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவர் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரமும் உதவி செய்ததாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தன்னை அமலாக்கத்துறை கைது செய்வதற்கு முன்னதாக முன்ஜாமீன் கோரி டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 5ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டில்லி பாட்டியாலா நீதிமன்றம், ஜூலை 10ஆம் தேதி வரை அவரை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று நடந்த மனு மீதான விசாரணைக்காக ப.சிதம்பரம் ஆஜராகியிருந்தார். விசாரணை முடிவில், சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவரையும் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Label