OUR CLIENTS
அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்த ஐம்பொன் முருகர் சிலை, சூலம் மாயம்!
அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்த ஐம்பொன் முருகர் சிலை, சூலம் மாயம்! Posted on 11-Jul-2018 அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்த ஐம்பொன் முருகர் சிலை, சூலம் மாயம்!

திருவண்ணாமலை, ஜூலை 11-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்த பல கோடி மதிப்பிலான ஐம்பொன்னால் ஆன முருகர் சிலை மற்றும் சூலம் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஐம்பொன் சாமி சிலைகள், பல நூறு கோடி மதிப்பிலான வைரம், வைடூரியம் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளன. சமீபத்தில் அஷ்டபந்தனம் பெயர்த்து எடுக்கப்பட்ட விவகாரத்தில் பல கோடி மதிப்பு நகைகள் கொள்ளை போனதாக புகார் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் அஷ்டபந்தனம் தவிர்த்து நகைகள் மாயமானதாக கூறப்படும் விவகாரத்தில் புகார் அளித்தால் விசாரணை நடத்துவேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பக்தர்களும் அருணாசலேஸ்வரர் கோயிலில் சாமி சிலைகள், நகைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோயிலில் பெட்டகத்தில் இருந்த ஐம்பொன் தண்டாயுதபாணி முருகர் சிலை மற்றும் சூலம் மாயமானதாக கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை எஸ்பியிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி நேற்று காலை கோயிலில் முருகன் சிலை மற்றும் சூலம் இருந்த இடங்களில் திடீர் ஆய்வு செய்தார்.

கோயில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களிடம்  விசாரணை நடத்தினார். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடந்த இந்த ஐம்பொன் சிலை மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Label