OUR CLIENTS
வந்தவாசியில் ரூ.2.50 லட்சம் மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்!
வந்தவாசியில் ரூ.2.50 லட்சம் மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்! Posted on 11-Jul-2018 வந்தவாசியில் ரூ.2.50 லட்சம் மதிப்பு  போதைப்பொருட்கள் பறிமுதல்!

வந்தவாசி, ஜூலை 11-

வந்தவாசி அருகே தடைசெய்யப்பட்ட ரூ.2.50 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்வணக்கம்பாடி கிராமத்தில் ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட ரூ.2.50 லட்சம் மதிப்பிலான பான் மசாலா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வந்தவாசி அடுத்த தென்வணக்கம்பாடி கிராமத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வீட்டில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சீதாராமன் என்பவர் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி  வைத்திருப்பது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெள்ளாறு காவல்& ஆய்வாளர் அழகுராணி மூலமாக ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் செந்தில்குமார் தலைமையில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கைலேஷ்குமார் மற்றும் சுப்ரமணியன், மோகன்குமார் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு தென்வணக்கம்பாடி கிராமத்திலுள்ள வீட்டில் சோதனை செய்தனர். இதில் தடைசெய்யப்பட்ட ரூ.2.50 லட்சம் மதிப்பிலான பான் மசாலா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

காவல் துறையினர்  உதவியுடன் போதைப் பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த வீட்டை பூட்டு போட்டு சீல் வைத்தனர். அதுதுடன் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த சீதாராமனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Label