OUR CLIENTS
அமெரிக்காவில் ஹாலிவுட்டையே கலக்கும் சென்னை ஒளிப்பதிவாளர் சதீஷ்ஷான்குட்டி!
அமெரிக்காவில் ஹாலிவுட்டையே கலக்கும் சென்னை ஒளிப்பதிவாளர் சதீஷ்ஷான்குட்டி! Posted on 11-Jul-2018 அமெரிக்காவில் ஹாலிவுட்டையே கலக்கும் சென்னை ஒளிப்பதிவாளர் சதீஷ்ஷான்குட்டி!

சென்னை, ஜூன் 11-

அமெரிக்காவில் ஹாலிவுட்டையே கலக்கும் சென்னை ஒளிப்பதிவாளர் சதீஷ் ஷான்குட்டி. இவரால் தமிழகத்துக்கு பெருமை ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில், சென்னை என்ற மாநகரம் வண்ணமயமாக வளர்ந்து வருகிறது. சதீஷ்ஷான்குட்டியின் தந்தை சண்முகம் சென்னை வண்ணாரப்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் அவரது விருப்பத்தினால் திரைப்படத் துறையில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார் சதீஷ் ஷான்குட்டி. இளம் ஒளிப்பதிவாளரான இவர் முதலில் நியூயார்க் திரைப்பட அகாடமியில் தனது
பயிற்சியை ஆரம்பித்தார். அவரது வழி காட்டிகளாக ஆன்டனி பி.ரிச்மான்ட் ஏஎஸ்சி, பிஎஸ்சி., ஜேஸக் லாஸ்கஸ் ஏஎஸ்சி, டேவிட் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பல தொழில்முறை மற்றும் வெற்றிகரமான ஹாலிவுட் ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள். இவர் நிறைய விஷயங்களை முயற்சி செய்தும் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று முதலில் கூறி வந்தார். பிறகு தான் ஒரு நல்ல ஒளிப்பதிவாளராக வேண்டும் என்று முடிவு செய்தார். அது கலை மற்றும் தொழில்நுட்பம் சேர்ந்த ஒரு கலவையாக இருந்ததாக ஷான் கூறினார். தன்னுடைய முடிவில் நியூயார்க் திரைப்பட அகாடமி, லாஸ் ஏஞ்சல்ஸில் ஒளிப்பதிவாளராக கலையை தொடர முடிவு செய்தார்.

தனக்கு இந்தியாவிலும் புகைப்படம் எடுத்தல் அனுபவம் இருந்ததாக தெரிவித்தார். அத்துடன் பல்வேறு வகைகளில் கேமராக்கள், லைட்டிங் மற்றும் ஃபிரேமிங்கைப் பற்றிக் கற்றுக்கொண்டார். தான் இன்னமும் கற்றுக்கொண்டு இருக்கிறேன் என்றார். அதுமட்டுமன்றி இன்னமும் ஆராய விரும்புவதாகவும் தெரிவித்தார். தான் பல்வேறு நிலைகளில் கேமரா, லைட்டிங் துறையில் செயல்பட்டு அனுபவம் பெற்றதாகவும் தெரிவித்தார்.  சதீஷ் தனது நேரத்தை பல துறைகளில் பிரித்து வேலை செய்கிறார். படப்பிடிப்பு அம்சங்கள், இசை வீடியோக்கள் மற்றும் விளம்பரங்கள் என்று கூறலாம். அவர் சில வகைகளில் மட்டும் தன்னை இணைக்கவில்லை. கதை மற்றும் காட்சிகளை அதிசயிக்கத்தக்க வகையில் காட்சியமைப்புகளுடன் சேர்த்து உருவாக்கி கதை சொல்லும் திறமை
படைத்தவர். சமீபத்தில் அவர் “பெனாசீர்” என்ற தலைப்பில் குறும்படம் ஒன்றில் பணிபுரிந்தார். அது சிஐசிஎஃப்எஃப் திரைப்பட விழாவில் இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மிகவும் எதிர்பார்க்கப்படும் ஈரானிய துப்பாக்கிச் சுடும் நபரைப்பற்றிய “ஜீபா &சொல்லப்படாத கதை” திரைப்படம் தயாரிப்பில் இறுதி கட்டத்தில் உள்ளது. Ô7 சைன்ஸ்Õ என்ற வலைத் தொடர் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்&கில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்னும் பல திரைப்படங்களின் தயாரிப்பு திட்டங்கள், பல திரைப்பட விழாக்களில் சமர்ப்பிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
அவரது படைப்புகள் பற்றிய தகவல்கள் மற்றும் அவரது தகவல் தொடர்பு பற்றி அறிய புதிய இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த www.sathishshankutty.com இணையதளம் வாயிலாக அவரது புதிய பணிகள் மற்றும் படைப்புகள் பற்றி அவ்வப்போது தெரிந்துகொள்ளமுடியும். அவரது எதிர்காலத் திட்டங்களுக்கு காலச்சககரம் நாளிதழ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Label