OUR CLIENTS
மக்களவைத் தேர்தல் மஜத- காங்கிரஸ் கூட்டணி கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
மக்களவைத் தேர்தல் மஜத- காங்கிரஸ் கூட்டணி கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் Posted on 12-Jul-2018 மக்களவைத் தேர்தல் மஜத-  காங்கிரஸ் கூட்டணி கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்

பெங்களூரு, ஜூலை 12-

இனிவரும் மக்களவைத் தேர்தலில் மஜதவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நெருங்கும் போது காங்கிரஸ் மேலிடம் சரியான முடிவெடுக்கும் என கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

டெல்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி இருந்தது. மூத்த தலைவர்களான எச்.கே.பாட்டீல், கே.எச்.முனியப்பா, ஹரிபிரசாத், சித்தராமையா உள்ளிட்டோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் கட்சி மேலிடம் என்னை தேர்ந்தெடுத்து இந்த பொறுப்பை வழங்கியுள்ளது. 

5 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்துள்ளேன். மூத்த தலைவர்கள் முதல், இளைஞர்கள் வரை நல்ல தொடர்பை வளர்த்துக் கொண்டுள்ளேன்.  எனவே, எனது பதவிக் காலத்தில் கட்சியை வளர்க்க பாடுபடுவேன். சிறப்பாக பணியாற்றி சிறந்த தலைவர் என்ற பெயரையும் எடுப்பேன். விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் காங்கிரஸ் மஜதவுடன் கூட்டணி அமைக்குமா என்பது குறித்து தேர்தலின் போது கட்சியின் மேலிடம் முடிவு செய்யும். 
மத்திய பாஜக ஆட்சியில் தேசிய அளவில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என்றார்.

Label