OUR CLIENTS
2019 தேர்தலில் தமிழகத்தில் முக்கிய சக்தியாக பாஜக திகழும் பாஜக உறுப்பினர் மகேஷ் கிரி
2019 தேர்தலில் தமிழகத்தில் முக்கிய சக்தியாக பாஜக திகழும் பாஜக உறுப்பினர் மகேஷ் கிரி Posted on 12-Jul-2018 2019  தேர்தலில் தமிழகத்தில் முக்கிய சக்தியாக பாஜக திகழும் பாஜக உறுப்பினர் மகேஷ் கிரி

புதுடெல்லி, ஜூலை 12-

அடுத்து வரும் 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக முக்கிய சக்தியாகத் திகழும் என்று கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் மகேஷ் கிரி கூறினார்.

பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா 2019 மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். இதற்காக தமிழகப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக சென்னைக்கு அவர் திங்கள்கிழமை வந்தார். அவருடன் கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மகேஷ் கிரியும் வந்திருந்தார். இந்நிலையில், தமிழக சுற்றுப் பயணம் தொடர்பாக டெல்லியில் செவ்வாய்க்கிழமை மகேஷ் கிரி கூறியதாவது: 

தமிழகத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்ட கூட்டத்தில் மக்கள் திரளாக கலந்து கொண்டர். இந்தக் கூட்டம் பாஜகவுக்கு மிகவும் நம்பிக்கைத் தருவதாக இருந்தது. தமிழகத்தில் பாஜக சார்பில் ஜந்து வாக்குச் சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதன்படி சக்தி கேந்திரம், மகா சக்தி கேந்திர நிர்வாகிகள் 15,000 பேர் அமித் ஷாவின் கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் முழு மூச்சுடன் ஈடுபடுவர். இதனால், அடுத்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் முக்கிய சக்தியாக பாஜக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், பாஜக கணிசமான வாக்குகளையும் பெறும் என்றார் அவர்.

Label