OUR CLIENTS
போலி நிருபர்கள் தொடர்பாக என்னிடம் புகார் தெரிவியுங்கள்! பாதிக்கப்பட்டவர்களுக்கு எஸ்.பி.பகலவன் அறிவுரை!
போலி நிருபர்கள் தொடர்பாக என்னிடம் புகார் தெரிவியுங்கள்! பாதிக்கப்பட்டவர்களுக்கு எஸ்.பி.பகலவன் அறிவுரை! Posted on 12-Jul-2018 போலி நிருபர்கள் தொடர்பாக என்னிடம் புகார் தெரிவியுங்கள்! பாதிக்கப்பட்டவர்களுக்கு எஸ்.பி.பகலவன் அறிவுரை!

வேலூர், ஜூலை 12-

வேலூர் மாவட்டத்தில் போலி செய்தியாளர்கள் பலர் உலா வருவதாகவும், அவர்கள் பலரை மிரட்டுகின்றனர் என்றும் புகார்கள் வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகார்களை என்னிடம் தெரிவியுங்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில்  பலர் தங்களை செய்தியாளர்கள் என்று கூறிக் கொண்டு தங்களது இருசக்கர வாகனங்களில் Ôபிரஸ்Õ என்று பல வண்ணங்களில் எழுதி கொண்டு வலம் வருகின்றனர். இதை காவல் துறையினர் கண்டும் காணாமல் இருப்பதால் அவர்கள் தைரியமாக வலம் வர ஆரம்பித்து விட்டனர் என ஒரு சாரர் குற்றம் சாட்டுகின்றனர். ஆர்.என்.ஐ தடை விதித்த (டி பிளாக்) மாத இதழ்கள், மாதம் இருமுறை இதழ்கள், வார இதழ்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டி பணம் கேட்பதாக அடிக்கடி தகவல்கள் வருகின்றன. இதற்கு அடித்தளமாக இருப்பது வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோவன்தான் காரணம் என்று முதலில் சொல்ல வேண்டும். அவர் உண்மையான பதிவு பெற்ற நிரந்தர ஆர்.என்.ஐ. சான்றிதழ் பெற்ற நாளிதழ்கள், வார, மாத, மாதமிருமுறை இதழ்களின் செய்தியாளர்களுக்கு செய்தி மக்கள் தொடர்பு துறை வாயிலாக வழங்கும் "ஊடகம்" என்ற ஸ்டிக்கரை வழங்க முன் பின் பார்த்து ஏமாற்றும் வேலையில் ஈடுபடுவதுதான். 

செய்தி பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு வழங்க வேண்டிய  "ஊடகம்" என்ற ஸ்டிக்கர்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. ஆனால், செய்தி பிரிவு அல்லாதவர்களுக்கு வழங்குவதால்தான் போலி நிருபர்கள் உருவாக காரணமாகின்றன. செய்திப்பிரிவில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்கலைஞர்கள், உதவி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஸ்டிக்கர்களை விநியோகம் செய்ய வேண்டும். பின்னர்தான் அடுத்தவர்களுக்கு வழங்க வேண்டும். இவர் விருப்பம்போல வாரி வழங்கிவிட்டு முக்கியமாக செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு மட்டும் இதுநாள் வரை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. 

அதுமட்டுமின்றி அரசு வழங்கும் அடையாள அட்டையையும் இதுநாள் வரை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் பிஆர்ஓ இளங்கோவன். பிரஸ் ஸ்டிக்கர், அரசு அடையாள அட்டை போன்றவை வழங்காமல் வேறென்னதான் வேலை செய்கிறார் இந்த பிஆர்ஓ என்ற சந்தேகம் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. இதனால் உண்மையான செய்தியாளர்கள் வெளிநபர்களை பேட்டி எடுக்கவோ, வரும் தகவல்கள் குறித்த உண்மை தன்மையை அறிந்து கொள்ள சம்மந்தப்பட்ட நபர்களை சந்தித்து கேள்வி கேட்டாலோ, அவர்கள் என்னை மிரட்டி பணம் கேட்கின்றனர் என்று புகார் கொடுக்கும் இழிநிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பல அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலதிபர்கள் நடந்து கொள்கின்றனர் என்பதும் நிதர்சன உண்மை. குறிப்பாக வருவாய்த்துறையினர் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்றோர்தான் புகார் கொடுத்து செய்தியாளர்களுக்கு கலங்கத்தை ஏற்படுத்தி விடுகின்றனர் என்று ஒரு சாரர் தகவல் தெரிவிக்கின்றனர். 

இதற்கிடையே வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன் போலி செய்தியாளர்கள் பணம் கேட்டு மிரட்டினால் என்னிடம் நேரடியாக வந்து புகார் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார். புகார் கொடுத்தவுடன் நடவடிக்கை எடுக்காமல் தீர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உழைக்கும் செய்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோவனை அழைத்து, மாவட்ட ஆட்சியர் ராமன் விசாரணை நடத்தி உண்மை நிலையை அறிந்து நடவடிக்கையை என்று எடுப்பார் என்பதே பல செய்தியாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது. 

பிஆர்ஓவை பார்த்து மாவட்ட ஆட்சியர் ராமன் ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார் என்பதும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் பிஆர்ஓவை என்று களையெடுக்கிறாரோ அன்றுதான் வேலூர் மாவட்ட செய்தித்துறை புது உத்வேகத்துடன் செயல்படத் தொடங்கும் என்கின்றனர் செய்தியாளர்கள். மாவட்ட ஆட்சியர் ராமனின் பானம் பிஆர்ஓ இளங்கோவன் மீது பாயுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label