OUR CLIENTS
சென்னை மாதவரம் பைபாஸ் சாலையில் விபத்துகளை தடுக்க பேரிகார்டுகள் அமைப்பு!
சென்னை மாதவரம் பைபாஸ் சாலையில் விபத்துகளை தடுக்க பேரிகார்டுகள் அமைப்பு! Posted on 12-Jul-2018 சென்னை மாதவரம் பைபாஸ் சாலையில் விபத்துகளை தடுக்க பேரிகார்டுகள் அமைப்பு!

பெரம்பூர், ஜூலை 12-

சென்னை பாரிமுனை முதல் கொல்கத்தா சாலை அமைந்துள்ளது. இவ்வழியில் பல ஆயிரக்கணக்கில் கனரக வாகனங்கள் செல்கின்றன. அப்படிச் செல்லும் வாகனங்கள் வழியில் கனகசத்திரம் என்ற இடத்தில் வரும்போது அடிக்கடி விபத்துகளில் சிக்குவது வாடிக்கையாக இருந்து வந்தது.

மாதவரம் சாலையில் இருந்து கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லவேண்டிய சூழல் இருக்கிறது. அப்படி சாலையைக் கடக்கும் போது சாலையில் விபத்து நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.இப்படி விபத்து நடக்காமல் தடுக்க யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதை கவனத்தில் கொண்டு செங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சந்திரமௌலி விபத்தை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டார். இதற்காக தனது உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அவர்களது அறிவுரைப்படி முக்கியச் சாலையின் குறுக்கே இரும்பு பேரிகார்டுகளை வைத்து விபத்து ஏற்படாமல் தடுத்தார்.

இதனால் விபத்துகள் ஏற்படாமல் முற்றிலும் தடுத்துள்ளார் சந்திரமௌலி. இந்த பேரிகார்டு வைத்ததில் ஆய்வாளர் சந்திரமௌலிக்கு உறுதுணையாக உதவி ஆய்வாளர் இக்பால், சக காவலர் கதிர் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். இந்த ஏற்பாடு செய்து நடைமுறைபடுத்திய ஆய்வாளர் சந்திரமௌலிக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். கருணை உள்ளத்தோடு விலை மதிப்பில்லாத மனித உயிரை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர் சந்திரமௌலி பாராட்டு மழையில் நனைய தொடங்கியுள்ளார்.

Label