OUR CLIENTS
கருணையின் நிறம் வெள்ளை! ஏழை பெண்ணுக்கு உதவிய போக்குவரத்து பிரிவு எஸ்எஸ்ஐ!
கருணையின் நிறம் வெள்ளை! ஏழை பெண்ணுக்கு உதவிய போக்குவரத்து பிரிவு எஸ்எஸ்ஐ! Posted on 12-Jul-2018 கருணையின் நிறம் வெள்ளை! ஏழை பெண்ணுக்கு உதவிய போக்குவரத்து பிரிவு எஸ்எஸ்ஐ!

வேலூர், ஜூலை 12-

வேலூர் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சிக்னலில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பகல் நேரம் போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் வழக்கம் போல் அப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் உச்சிவெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்க, நடுத்தர வயது பெண் ஒருவர் வெற்றுக் காலில் சாலையின் வெப்பம் தாளாமல் பாதத்தை தரையில் வைக்க இயலாது அவதிப்பட்டு  கொண்டிருந்தார். இதனால் அவசரமாக ஓடிச்சென்று சாலையோர நிழலில் சற்று ஒதுங்கி நின்றுள்ளார். இதைக்கண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் அப்பெண்ணிடம் சென்று ஏன் வெறும் காலில் அவதிப்படுகிறீர்கள், செருப்பு போட்டுக் கொண்டு நடக்கவேண்டியதுதானே என கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த அப்பெண் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் அந்த பெண்ணுக்கு கணவர் இல்லை என்றும், மகன் தாயை கவனிக்காத ஊதாரி எனவும் விசாரித்து தெரிந்து கொண்டார் சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன்ராஜ்.

இதைத்தொடர்ந்து, அப்பெண்ணை அங்கேயே நிழலில் இருக்குமாறு சொல்லிவிட்டு, அருகிலிருந்த செருப்புக்கடைக்குச் சென்று ஏழை ஒருவருக்கு இலவசமாக தர வேண்டியுள்ளது என்று தன்னிடமுள்ள 60 ரூபாய் பணத்தை செருப்புக் கடைக்காரரிடம் கொடுத்துள்ளார். இதுகுறித்து விஷயமறிந்த கடைக்காரர் தானும் அந்த ஏழைக்கு உதவுவதாக கூறி நல்ல செருப்பு ஒன்றை மோகன்ராஜ் வசம் கொடுத்துள்ளார். வெயில் நேரத்தில் பாதம் சூடு தாங்காமல் தவித்த அந்த பெண்மணி செருப்பு கிடைத்தவுடன் சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன்ராஜூக்கு நன்றி கூறி நிம்மதியாய் நடந்து சென்றார் அந்த பெண்மணி. இதைப்பார்த்த உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் ஏழை ஒருவருக்கு உதவிய சந்தோஷத்துடன் தனது பணியை மீண்டும் கவனிக்கச் சென்றார். ஏழை ஒருவரின் துன்பத்தை கண்டு அவருக்கு உதவிய நல்ல உள்ளத்தை காலச்சக்கரம் நாளிதழ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

Label