OUR CLIENTS
வேலூர், வாலாஜாவில் இன்றும், நாளையும் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு!
வேலூர், வாலாஜாவில் இன்றும், நாளையும் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு! Posted on 12-Jul-2018 வேலூர், வாலாஜாவில் இன்றும், நாளையும் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு!

வேலூர், ஜூலை 12-

வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், வாலாஜா மற்றும் ராணிப்பேட்டை நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்குரைஞர்கள் இன்றும், நாளையும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய உள்ளதாக வேலூர் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் என்.ரவிராமன் தெரிவித்துள்ளார்.

ஆற்காட்டைச் சேர்ந்த வழக்குரைஞர் நந்தகுமார் என்பவர் மீது பொய்வழக்கு பதிந்ததைக் கண்டித்தும், வேலூரில் மூன்று நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் செய்யாததையும், மின்வெட்டு நேரங்களில் ஜெனரேட்டர் இயக்காததை கண்டித்தும் (ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில்) இன்றும், நாளையும் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், வாலாஜா, ராணிப்பேட்டை நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய முடிவு செய்துள்ளனர். வேலூர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் அலுவலகத்தில் முன்னாள் வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் சுதாகர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் என். ரவிராமன் தெரிவித்தார்.

Label