OUR CLIENTS
காவல் நிலையம் முன்பு பெண் குத்திக் கொலை!
காவல் நிலையம் முன்பு பெண் குத்திக் கொலை! Posted on 12-Jul-2018 காவல் நிலையம் முன்பு பெண் குத்திக் கொலை!

வேலூர், ஜூலை 12-

ராணிப்பேட்டை காவல் நிலையம் முன்பு பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்ததவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், செங்குந்தர் கிராமத்தைச் சேர்ந்தவர் சகுந்தலா(45). இவருக்கும் வாலாஜா வட்டம் வாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவருக்கும்  கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை குறித்து ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துவிட்டு வந்த சகுந்தலாவை சுரேந்திரன் காவல் நிலைய வாசலிலேயே வைத்து கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ராணிப்பேட்டை காவலர்கள் சுரேந்திரனை பின் தொடர்ந்து விரட்டிப்பிடித்து கைது செய்தனர். அவரை ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் திடீர் பதட்டம் நிலவுகிறது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Label