OUR CLIENTS
டெல்லியில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகள்! ஆளுநர் அனில் பைஜாலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
டெல்லியில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகள்! ஆளுநர் அனில் பைஜாலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் Posted on 13-Jul-2018 டெல்லியில் மலைபோல்  குவிந்துள்ள குப்பைகள்! ஆளுநர் அனில் பைஜாலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி, ஜுலை 13-

டெல்லியில் திடக்கழிவு மேலாண்மை விவகாரத்தில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

டெல்லி அரசில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூலை 10&ம் தேதி விசாரணை நடைபெற்ற போது, டெல்லி குப்பையில் மூழ்கி வருகிறது, மும்பை நீரில் மூழ்கி வருகிறது. ஆனால் அரசு எதுவும் செய்வது கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு கடிந்துக் கொண்டது.  திடக்கழிவு மேலாண்மையில் மாநிலங் களின் கொள்கையை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யாத 10 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு அபராதம் விதித்தது.

நேற்று விசாரணை நடைபெற்ற போது, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநகராட்சி அதிகாரங்களுக்கு உரிமை கொண்டாடும் துணைநிலை ஆளுநர், பணிகளை செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பியது.

 உங்களுக்குதான் அதிகாரம் உள்ளது என்கிறீர்கள், நீங்கள்தான் சூப்பர் மேன் என்கிறீர்கள், ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று துணைநிலை ஆளுநர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் களிடம் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. துணைநிலை ஆளுநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் குப்பைகளை அகற்றுவது மாநகராட்சியின் பணியாகும், அதனை கண்காணிப்பது தான் என்னுடைய பணியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, குப்பையை அகற்றுவது முதல்வரா அல்லது துணைநிலை ஆளுநரா என மத்திய அரசு மற்றும் டெல்லி அரசிடம் விளக்கம் கோரியுள்ளது.

Label