OUR CLIENTS
மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்கள் நியமனம்-குடியரசுத்தலைவர் உத்தரவு
மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்கள் நியமனம்-குடியரசுத்தலைவர் உத்தரவு Posted on 16-Jul-2018 மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்கள் நியமனம்-குடியரசுத்தலைவர் உத்தரவு

புதுடெல்லி, ஜூலை 16-

நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார்.

நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு மொத்தம் 12 உறுப்பினர்களை நியமிப்பதற்கு குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் உண்டு. கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களை இந்த பதவிக்கு குடியரசுத்தலைவர் நியமிப்பார். அதன்படி இந்த இடங்களுக்கு ஏற்கனவே 8 பேர் நியமிக்கப்பட்டு விட்டனர். எஞ்சிய 4 இடங்கள் மட்டும் காலியாக இருந்தன.

இந்த நிலையில் குடயரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசியல் சாசனத்தில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், பிரதமர் மோடியின் ஆலோசனையின் பேரிலும் காலியாக இருந்த 4 இடங்களுக்கும் முன்னாள் பா.ஜனதா எம்.பி. ராம் ‌ஷகல், ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் ராகேஷ் சின்கா, பிரபல சிற்பி ரகுநாத் மொகபாத்ரா, பிரபல நடனக்கலைஞர் சோகல் மான்சிங் ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்தார்.

உத்தரபிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ராம் ‌ஷகல் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். விவசாயிகள், தொழிலாளர்கள், இடம்பெயர்ந்தோருக்காக சேவையாற்றி வருபவர். ராபர்ட்கஞ்ச் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து பா.ஜனதா சார்பில் 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டும் உள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த ராகேஷ் சின்கா ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர். இந்தியா பாலிசி பவுண்டேசன் என்னும் அமைப்பை நிறுவி அதன் இயக்குனராகவும் உள்ளார். டெல்லியில் உள்ள மோதிலால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் ராகேஷ் சின்கா பத்திரிகைகளில் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.

ரகுநாத் மொகபாத்ரா ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபல சிற்பி ஆவார். 1959&ம் ஆண்டு முதல் சிற்பக்கலையில் ஈடுபட்டுவரும் இவர், 2 ஆயிரம் மாணவர்களுக்கு சிற்பக்கலை பயிற்சி அளித்துள்ளார். கோவில் சிற்பங்களை பாதுகாப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்திய நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் இவர் வடிவமைத்த 6 அடி உயர சூரியக்கடவுள் சிலையும், பாரீஸ் நகரில் உள்ள புத்தர் கோவிலுக்கு இவர் வடிவமைத்து கொடுத்த மரத்திலான புத்தர் சிலையும் புகழ்பெற்றவை.

ஒடிசி நடனக் கலைஞரான சோனல் மான்சிங், 1977-ம் ஆண்டு டெல்லியில் இந்திய பாரம்பரிய நடன கலை மையத்தை அமைத்தார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் ஒடிசி நடனக் கலையில் ஈடுபட்டுவருகிறார். சிறந்த நடனக்கலை வடிவமைப்பாளர், ஆசிரியை, பேச்சாளர், சமூக சேவகி என்ற பெயரும் இவருக்கு உண்டு.

Label