OUR CLIENTS
விளைநிலங்களுக்குள் மின் கோபுரம் அமைக்க திட்டம் விவசாயம் பாதிக்கப்படும் என மிரளும் விவசாயிகள்!
விளைநிலங்களுக்குள் மின் கோபுரம் அமைக்க திட்டம் விவசாயம் பாதிக்கப்படும் என மிரளும் விவசாயிகள்! Posted on 16-Jul-2018 விளைநிலங்களுக்குள் மின் கோபுரம் அமைக்க திட்டம் விவசாயம் பாதிக்கப்படும் என மிரளும் விவசாயிகள்!

வேலூர், ஜூலை 16-

விளைநிலங்களுக்கள் மின் கோபுரம் அமைக்க திட்டமிட்டள்ள அரசின் அடாவடி நடவடிக்கையை பார்த்து விவசாயம் பாதிக்கப்படும் என மிரளும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

விளைநிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதால் வரும் ஆபத்து குறித்த அண்மையில் நடந்த சட்டசமன்ற கூட்டத்தில் எச்சரித்தார் தாராபுரம் காங்கிரஸ் எம்எல்ஏ காளிமுத்து. எந்த ஆபத்தும் இல்லை என்பது குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டம் என பதிலளித்தார் மின்துறை அமைச்சர் தங்கமணி, இந்தியாவில் உள மற்ற மாநிலங்களையெல்லாம் விட்டுவிட்டு தமிழகத்தை மட்டும் குறிவைத்து குதறிக்கொண்டிருக்கிறது ஆப் கி மோடி அரசு. முன்னற்றம், வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகளின் வருமான வெறிக்கு விவசாய நிலங்களை பலி கொடுக்கத் துணிந்து விட்டதன் அடுத்த கட்டம்தான் உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்கும் திட்டம்.

முப்போகம் விளைந்த பூமியெல்லாம் இனி எப்போது விளையுமோ என்று சொல்லும் அளவுக்கு தரிசு நிலங்களாகிவிட்டன. இந்த நிலையில் இருக்கும் விவசாய நிலங்களையும் கபளீகரம் செய்யும் எண்ணத்தோடு களம் இறங்கியிருக்கிறது மோடி அரசு. பவர் கிரிட் என்ற நிறுவனமும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் இணைந்து உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்கப்போகின்றன. இந்த கோபுரங்கள் வழியாகச் செல்லும் மின்சாரம் பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான், கிரிகஸ்தான் போன்ற நாடுகளுக்கு விற்கப்படும். மொத்தம் 70 ஆயிரம் மெகாவாட் மின்சார விற்பனையால் இந்தியாவுக்கு கொழுத்த லாபம் கிடைக்குமென்று நினைத்தனர்.நெம்பர் ஒன் ஏமாளிகள் நாம்தான்.

பவர் கிரிட் என்ற நிறுவனமானது கொழுத்துப் பெருத்த கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சொந்தமானது. கொழுத்தவர்களின் கொடிய திட்டம் பாதை இப்படித்தான் அமையப்போகிறது.  கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் போன்ற தமிழகத்தின் பாதி மாவட்டங்களின் விவசாய நிலங்கள் வழியாகத்தான் மின்கோபுரம் அமைக்க திட்டம் தீட்டியுள்ளனர். இதில் புகளூரிலிருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ச்சூர், புகளூரிலிருந்து உடுமலைப்பேட்டை மைவாடி. அடுத்து புகளூரிலிருந்து திருவளம், கேரள மாநிலம் திருச்சூர், தமிழகத்தின் இடையார்பாளையம், அரசூர், இடையார்பாளையத்திலிருந்து மைவாடி, ராசிபாளையம் முதல் தருமபுரி பாலவாடி வரை, அடுத்து பாலவாடியில் இருந்து அரசூர், ஈங்கூர், திருவளத்திலிருந்து அரியலூர் வரை என மொத்தம் 12 மின் வழித்தடங்கள்.

இதுமட்டுமல்ல, அணுமின், அனல்மில் நிலையங்களில் இருந்தும் மின்சாரத்தை தாராபுரம் அருகே உள்ள இச்சிப்பட்டி என்ற ஊருக்கு கொண்டு வந்து, அங்கிருந்து மற்ற மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் விநியோகிக்கும் திட்டமும் வைத்திருக்கிறார்கள். இவையெல்லாமே விவசாய நிலங்களில் 400 மீட்டர் இடைவெளியில், 20 முதல்
100 மீட்டர் நீள அகலத்தில் அமைக்கப் போகிறார்கள். ஏற்கனவே 800 முதல் ஆயிரம் கிலோவாட் மின்சாரம் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மின்கோபுரங்களால் விவசாய நிலங்களை விழுங்கிவிட்டார்கள்.

இப்போது கல்பாக்கத்தில் கூடுதலாக 4 அணுமின் உலைகள், கூடங்குளத்தில் 6 அணுமின் உலைகள் நிறுவப் போகிறார்கள். அத்துடன் தூத்துக்குடி, நாகப்பட்டினம், கடலூர், மரக்காணம், ராமநாதபுரம், கும்பகோணம், எண்ணூர், மணலி, செங்கல்பட்டு, காட்டுப்பள்ளி, செய்யூர், ஜெயங்கொண்டம், உடன்குடி இங்கெல்லாம் அனல்மின் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எனு மொத்தம் 70 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொண்டு செல்ல இன்னும் எத்தனை லட்சம் விவசாய நிலங்கள் பறிபோகப் போகின்றனவோ?.

வரப்போகும் பேராபத்தை விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் புரிந்து கொண்டுள்ளனவா என்றும் தெரியவில்லை. விவசாய நிலங்களுக்குள் மின் கோபுரம் அமைக்கட்டமிட்டுள்ளனர். விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் மிரள ஆரம்பித்துள்ளனர். ஆனால் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் விவசாயிகள் என்பதுதான் இன்று புரியாத புதிராக உள்ளது. இந்த மின்கோபுர திட்டத்தால் நிலங்கள் துண்டாடப்படும்.

விவசாயம் முற்றிலும் அழிந்து போகும். கால்நடைகள் வளர்க்க முடியாது. மின்கதிர் வீச்சால் மக்களுக்கு புற்றுநோய் தாக்கும் ஆபத்தும் ஏற்படும். கேபிள் அமைத்து மின்சாரம் எடுத்து செல்லாமல் நொண்டி சாக்கு கூறிவிட்டு விவசாயிகளை ஏமாற்றப் பார்க்கிறது அரசு என்று விவசாயிகள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தமிழகத்தில் இந்த பிரச்னையை அரசு எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label