OUR CLIENTS
ஆர்டிஓ அலுவலகத்தின் ஒரே தாரக மந்திரம்! கட்டிங் இல்லையா... வேலை நடக்காது...
ஆர்டிஓ அலுவலகத்தின் ஒரே தாரக மந்திரம்! கட்டிங் இல்லையா... வேலை நடக்காது... Posted on 16-Jul-2018 ஆர்டிஓ அலுவலகத்தின் ஒரே தாரக மந்திரம்! கட்டிங் இல்லையா... வேலை நடக்காது...

வேலூர், ஜூலை 16-

வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனைத்து வேலைகளையும் கட்டிங்தான் நிறைவேற்றுகிறதாம். கட்டிங் இல்லா ஃபைல் தள்ளி வைக்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும் என்பது எழுதப்படாத விதியாகும்.
புதுப்பித்தலுக்காக கட்டணம் கட்டும்போது 5 ரூபாயாக இருந்த கட்டிங் 20 ரூபாயாக உயர்த்திவிட்டனர்.

ஒரு வாகனத்துக்கு எப்.சி. செய்தால் அரசு நிர்ணயித்த கட்டணம் இல்லாமல் ரூபாய் 500 தனியாக அதிகாரிக்குப் போகிறது. வேகக்கட்டுப்பாடு கருவி (ஸ்பீடு கவர்னர்) பொருத்தும் வாகனம் ஒன்றுக்கு ரூ.500, ஓட்டுநர் உரிமம் தொலைந்துபோய் நகல் வேண்டி விண்ணப்பித்தால் அதிகாரிக்கு கட்டிங் ரூ.900, இரண்டு சக்கரம் மற்றும்  நான்கு சக்கர உரிமம் புதியதாக பெறுவதற்கு அதிகாரிக்கு கட்டிங் ரூ.1000.

மேலும் இது தவிர புதிய வண்டிகளுக்கு பதிவு செய்ய கம்பெனி ஏஜென்டுகளிடம் தனியாக கட்டிங் வாங்குகின்றனர். வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்த பின்னரே வாகன உரிமையாளரிடம் கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால் டீலருக்கும், அதிகாரிகளுக்கும் உள்ள அட்ஜஸ்ட்மெண்ட் காரணமாக வாகனத்தில் உள்ள ஸ்பீடா மீட்டரை கழற்றிவிட்டு ஓட்டி வருகின்றனர். பின்னர் வாகனப்பதிவு செய்ய வருகின்றனர்.

உடனடியாக வேலை முடிகிறது. இப்படி பல தகிடுதத்தங்கள் இந்த துறையில் அன்றாடம் நிகழ்ந்து வருகிறது. வாகனப்பதிவு சரிபார்க்க வரும் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு தனியாக 'ப'வைட்டமின் அந்த கோப்புகளில் வைக்கப்படுகிறது. அதை பொதுமக்கள் பார்த்தால் கூட பரவாயில்லை என்று பணத்தை எடுத்து கொண்டு கையொப்பம் இட்டவாறு செல்கிறார் கடமை தவறாத அந்த அலுவலர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.  வேலூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அதிகாரிகளுக்கு வசூல் செய்து தருவதற்காகவே தனி நபர்களை நியமித்து தினமும் பணம் பார்த்து கொழிக்கின்றனர். ஷெ..... என்பவர்தான் முக்கிய அதிகாரிக்கு பணம் வாங்கித்தருகிறார். இவர் பல அதிகாரிகளுக்கு பணம் வாங்கி கொடுத்து நல்ல முன் அனுபவம் உள்ளவர் என்று கூறப்படுகிறது. இதை சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டுநர்களும் கதை கதையாக கூறுகின்றனர். 


எஃப்.சி.க்கு வரும் வாகனங்களுக்கு  முதலிலேயே கட்டிங் வாங்கிக்கொண்டு அதில் குறியிட்டு அனுப்பினால் மட்டுமே அந்த வாகனம் பாஸ் ஆகும். பணம் பெற்று குறியிடும் நபர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு அருகிலுள்ள மாடியில் இருந்து வேலை பார்க்கிறார். மற்றபடி மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு  பணம் வாங்கித்தருவதற்கு என டிரைவிங் ஸ்கூல் நடத்தும் ஒருவர் பொறுப்பில் உள்ளாராம். புதிய வாகனம் பதிவு செய்யும் முன் விபத்து ஏற்பட்டாலும் கூட இங்கு அட்ஜெஸ்ட்மென்ட் முறையில் இன்ஷூரன்ஸ் கிளியர் ஆக வழிவகை செய்யப்படுகிறது.

பல மாதங்களாகவே இங்கு வருமானவரி ரெய்டு வரும் என்கிற தகவல் றெக்கை கட்டி பறக்கிறது. வட்டார போக்குவரத்து அலுவலத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் முதல் வட்டார போக்குவரத்து அலுவலர் வரை வளமோடு வாழ்கின்றனர். இதற்கு பின்புலமாக இருப்பது லஞ்சம். இந்தியன் படத்தில் கமல்ஹாசன் கூறியது போன்று இன்று வரை திருந்தாமல் லஞ்சம் வாங்கியே பிழைப்பு நடத்தி வருவது வெட்டவெளிச்சமாக தெரியவந்துள்ளது. பணம் இல்லாமல் இங்கு எந்த வேலையும் நடக்காது. ஒரே பதிவு எண்ணில் 3க்கும் மேற்பட்ட வாகனங்கள் வேலூரில் இயக்கப்படுகின்றன. இருசக்கர, நான்கு சக்கர ஏஜென்சிகள், டீலர்களிடம் மொத்தமாக ஒரு குறிப்பிட்ட தொகையை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் கறந்து விடுகிறார். பேச்சு மட்டும் வீரமாக பேசுகிறார். செயலில் ஒன்றும் இல்லை. பணம் ஒன்றே குறியாக கொண்டு செயல்படுகிறார். எங்கும் வாகன தணிக்கை செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வது இல்லை. புரோக்கர்கள் வாயிலாக கனக்கச்சிதமாக வேலை நடக்கிறது.    

இதற்கெல்லாம் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label