OUR CLIENTS
சாலை விபத்தில் உயிரிழந்த நிருபர் ஷாலினியின் குடும்பத்துக்கு என்ஜேயு சார்பில் ஆழ்ந்த இரங்கல்! நிவாரண தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க கோரிக்கை
சாலை விபத்தில் உயிரிழந்த நிருபர் ஷாலினியின் குடும்பத்துக்கு என்ஜேயு சார்பில் ஆழ்ந்த இரங்கல்! நிவாரண தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க கோரிக்கை Posted on 17-Jul-2018 சாலை விபத்தில் உயிரிழந்த நிருபர் ஷாலினியின்  குடும்பத்துக்கு என்ஜேயு சார்பில் ஆழ்ந்த இரங்கல்! நிவாரண தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க கோரிக்கை

வேலூர், ஜூலை 17-

சாலை விபத்தில் உயிரிழந்த மாலை முரசு தொலைக்காட்சி நிருபர் ஷாலினியின் குடும்பத்துக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் அகில இந்திய தலைவர் கா.குமார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக என்ஜேயு அகில இந்திய தலைவர் கா.குமார் திங்கள்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது: மாலை முரசு தொலைக்காட்சி நிருபர் ஷாலினி திங்கள்கிழமை அன்று சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

மாலை முரசு தொலைக்காட்சி நிருபர் ஷாலினி மற்றும் நண்பர்கள் திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்த போது, மதுரை & திண்டுக்கல் சாலையில், பொட்டிகுளம் அருகே கார் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்ததில், காரில் பயணம் செய்த ஷாலினி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஷாலினியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மாலை முரசு தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மாலை முரசு தொலைக்காட்சி நிருபர் ஷாலினியின் குடும்பத்துக்கு சிறப்பு நிகழ்வாக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அகால மரணமடைந்த நிருபர் ஷாலினியின் குடும்பத்துக்கு  இழப்பீட்டுத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கி தமிழக அரசு உதவ வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Label