OUR CLIENTS
கல்வித்துறைக்காக பணியாற்றாத மத்திய அரசுகள் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு
கல்வித்துறைக்காக பணியாற்றாத மத்திய அரசுகள் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு Posted on 17-Jul-2018 கல்வித்துறைக்காக பணியாற்றாத மத்திய அரசுகள் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

இந்தூர், ஜுலை 17-

உருது மொழி பத்திரிகை ஒன்றில் அண்மையில் வெளியாகியிருந்த செய்தியில், முஸ்லிம் மதத்தை சேர்ந்த அறிவுஜீவிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் சந்தித்தபோது, காங்கிரஸ் கட்சியானது முஸ்லிம்களுக்கான கட்சி என்று தெரிவித்திருந்ததாக குறிப்பிடப் பட்டிருந்தது. இந்தச் செய்தியை காங்கிரஸ் மறுத்தது. இதுகுறித்து அக்கட்சி அளித்த விளக்கத்தில், நாட்டு மக்கள் 132 கோடி பேருக்கும் பொதுவான கட்சிதான் காங்கிரஸ் எனத் தெரிவித்தது. 

இந்த விவகாரத்தை முன்வைத்து, காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவுக்கு இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அசாம்காரில் பேசிய பிரதமர் மோடி முஸ்லிம் ஆண்களுக்கு மட்டும் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பினார். இதனையடுத்து பதிலடி கொடுத்த காங்கிரஸ், அவருடைய பாதிக்கப்பட்ட மனநிலையை காட்டுகிறது என விமர்சனம் செய்தது. இப்போது இவ்விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கேள்வியை எழுப்பியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இந்து -முஸ்லிம் பற்றி பேசுவது இந்தியா நம்பர்&ஒன் ஆக உதவுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். 

பிரதமராக பதவியேற்ற பின்னரும் இந்து & முஸ்லிம் என பேசுவதால், மத்தியில் உள்ள பா.ஜனதா எந்தஒரு சாதனையையும் செய்யவில்லை என்பதையே காட்டுகிறது. இப்படி இந்து மற்றும் முஸ்லிம் பற்றி பேசிக்கொண்டு இருந்தால் உலக நாடுகள் மத்தியில் இந்தியா நம்பர்&ஒன் ஆக உதவுமா?. அமெரிக்கா நானோ தொழில்நுட்பம் பற்றியும், ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து பெரும் தொழில்நுட்பம் பற்றியும் பேசிவரும் நிலையில் பிரதமர் மோடி இப்போது இந்து & முஸ்லிம் பற்றியே பேசுகிறார். கல்வி மட்டும் இந்தியாவை நம்பர் ஒன் ஆக்க உதவும், ஆனால் 70 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிசெய்யும் எந்தஒரு அரசும் கல்வித்துறைக்காக பணியாற்ற வில்லை என குற்றம் சாட்டியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். 

“உலகிலே இந்தியர்கள்தான் மிகச் சிறந்தவர்கள், ஆனால் இங்குள்ள அழுக்கான அரசியல் காரணமாக ஏராளமான மக்கள் வேண்டு மென்றே படிக்காதவர்களாக்கப் படுகிறார்கள்,” எனவும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

Label