OUR CLIENTS
மணல் கொள்ளைக்காகவே மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்படுகிறது- அன்புமணி ராமதாஸ்
மணல் கொள்ளைக்காகவே மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்படுகிறது- அன்புமணி ராமதாஸ் Posted on 18-Jul-2018 மணல் கொள்ளைக்காகவே மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்படுகிறது- அன்புமணி ராமதாஸ்

சேலம், ஜூலை 18-

மணல் கொள்ளைக்காகவே மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்படுகிறது என்று சேலத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். 

சேலத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- சேலம் மாநகரில் 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடையாமல் உள்ளது. இதனால் கொசுதொல்லை, போக்குவரத்து நெரிசல் குடிநீர் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அரசு போதிய நிதி ஒதுக்காததால் மாநகர நிர்வாகம் கடன் வாங்கி பணிகளை செய்து வருகிறது.

மேட்டூர் உபரி நீர்த்திட்டம், தோணிமடுவு திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுமாறு 40 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், இதுவரை செயல்படுத்தவில்லை.
சேலம்-சென்னை இடையேயான 8-வழி விரைவு பசுமைச்சாலை பொது மக்களுக்காக அமைக்கப்படவில்லை. இந்த சாலை யாருக்குமே பயனில்லை. 4 வழிச்சாலை, 6 வழிச்சாலை, அதன் பின்னர் தான் 8 வழிச்சாலை போட முடிவு செய்து இருக்கிறார்கள்.

நான், விவசாயிகளிடம் கருத்து கேட்டேன். அவர்கள் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். யாருமே தானாக முன்வந்து நிலம் கொடுப்பதாக கூறவில்லை. அரூர் அருகே முத்தானூர் கிராமத்தில் 8-வழிச்சாலைக்காக பள்ளிக்கூடம் இடிக்கப்படுகிறது. அந்த மாணவர்கள் என்னை சந்தித்து அழுதனர். இது எனக்கு வேதனை அளிக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்களின் நிறுவனங்கள் சாலைக்காக இடிக்கப்படவில்லை. 1½ லட்சம் மரங்கள் அழிக்கப்படுகிறது. சட்ட ரீதியாக நீதிமன்றத்தை அணுகுவேன். கிருஷ்ணகிரி வழியாகவும், அரூர்-திருப்பத்தூர் வழியாகவும், உளுந்தூர்பேட்டை வழியாகவும் சென்னைக்கு செல்ல 3 பாதைகள் இருக்கிறது. 8-வழிச்சாலை தேவையில்லை. இதில் ஏதாவது ஒரு சாலையை விரிவுப்படுத்தலாம்.

நடிகர் ரஜினி 8-வழிச்சாலை திட்டம் தேவையானது என சொல்கிறார். அவருக்கு 8 வழிச்சாலை திட்டத்தை பற்றி சரியாக தெரியாது. உண்மையான வளர்ச்சி வேண்டும் என்றால் சென்னை-கன்னியாகுமரி கடற்கரை வழியாக இருக்கும் சாலையை 8-வழிச்சாலையாக மாற்றலாம். கர்நாடக மாநிலத்தில் தற்போது மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. ஒரு வாரத்திற்கு முன்பாக மேட்டூர் அணையை திறந்திருக்கலாம். வேண்டும் என்றே காலம் தாமதம் செய்கின்றனர். மணல் கொள்ளைக்காகவே மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 7 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இது 3 ஆண்டுகளில் 10 லட்சமாக உயரும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் திவாலாகிவிடும். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த மந்திரிகளுக்கு ஒன்றுமே தெரியாது. அவர்கள் தான் இப்போது முதல்-அமைச்சராக உள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 ஆண்டுகளாக நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருக்கிறார். அவர் உறவினர்களுக்கே பெரும்பாலான காண்ட்ராக்ட் வழங்கப்படுகிறது.

இந்த காண்ட்ராக்ட் நிறுவனங்களில் பங்குதாரராக இருப்பவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. இதனை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். முதல்வராக இருப்பவர், தனது சொந்தக்காரர்களுக்கு டெண்டர் வழங்குவது தவறு. இது குறித்து கவர்னரிடம் புகார் கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும. இருதயம், நுரையீரல், கல்லீரல் இங்குள்ளவர்களுக்கு பொருத்தாமல் வெளிநாட்டினருக்கு முக்கியத்துவம் கொடுத்து பொருத்துகிறார்கள். இதில் அதிகபட்சமாக ரூ.12 கோடி வரை லஞ்சம் கைமாறுகிறது.

இதில் சென்னையில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கு தொடர்பு இருக்கிறது. இது குறித்தும், முட்டை கொள்முதல் ஊழல் குறித்தும் சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும். சென்னையில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர்களை தூக்கில் போட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Label