OUR CLIENTS
செவாலியே விருது: கமல்ஹாசனுக்கு கருணாநிதி வாழ்த்து
செவாலியே விருது: கமல்ஹாசனுக்கு கருணாநிதி வாழ்த்து Posted on 23-Aug-2016 செவாலியே விருது: கமல்ஹாசனுக்கு கருணாநிதி வாழ்த்து

நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரான்ஸ் நாட்டின் சிறந்த விருதான ‘செவாலியே’ விருது, கலைஞானி நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தியை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இதுவரை 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்து, திரையுலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் நடிகர் கமல்ஹாசன்.

50 ஆண்டு காலமாக திரையுலகில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், சிறந்த நடிப்புக்காக மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ’, ‘பத்மபூஷண்’ ஆகிய விருதுகளையும், தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதையும், மேலும் பல தேசிய விருதுகளையும் ஏற்கனவே பெற்றிருக்கிறார்.

‘செவாலியே’ விருது பெற்றுள்ள கலைஞானி நடிகர் கமல்ஹாசனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு கருணாநிதி கூறி உள்ளார்.

Label