ஒரு எம்.பி. கூட இல்லாமல் எந்த அடிப்படையில் ஆதரவு? -ஸ்டாலினுக்கு மைத்ரேயன் கேள்வி Posted on 20-Jul-2018
புதுடெல்லி, ஜுலை 20-
நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தார்மீக ஆதரவு என்று ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், ஒரு எம்.பி. கூட இல்லாத நிலையில் எதன் அடிப்படையில் ஆதரவு? என மைத்ரேயன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த தீர்மானத்தை அவையில் ஆதரிக்க முடியாது என்றாலும், திமுக தார்மீக ஆதரவை அளிக்கும் என முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள அதிமுக எம்.பி. மைத்ரேயன், “திமுகவிற்கு மக்களவையில் ஒரு எம்பி கூட இல்லை. அப்படி இருக்க எந்த அடிப்படையில் ஆதரவு? தார்மீக ஆதரவை எல்லாம் வாக்கெடுப்பின் போது கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.