OUR CLIENTS
முக்கிய வழக்குகளின் ஆவணங்கள் மாயம்! சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
முக்கிய வழக்குகளின் ஆவணங்கள் மாயம்! சிபிஐ விசாரணைக்கு உத்தரவு Posted on 20-Jul-2018 முக்கிய வழக்குகளின் ஆவணங்கள் மாயம்! சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

சென்னை, ஜுலை 20-

முன்னாள் நீதிபதி வீட்டில் முக்கிய வழக்குகளின் ஆவணங்கள் மாயமானது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் சிபிஜ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து கடந்த 2017 மே மாதம் டி.மதிவாணன் ஓய்வு பெற்றவர். இவர் நீதிபதியாக இருந்த சமயத்தில் இவர் விசாரித்த 100க்கும் மேற்பட்ட முக்கியமான வழக்குகளின் ஆவணங்கள் தற்போது மாயமாகியுள்ளன. குறிப்பாக நீதிபதியின் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்ட வழக்கு ஆவணங்கள், திரும்ப நீதிமன்றத்திற்கு வந்து சேராமல் இருந்துள்ளன. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் சிலர் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் புகாரளித்தனர்.

இந்த புகாரைத் தொடர்ந்து, இதனை உடனடியாக விசாரிக்கும்படி நீதிபதி, உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார். இந்த விசாரணையில் வழக்குகள் ஆவணங்கள் அனைத்தும் நீதிபதியின் வீட்டிற்கு சென்ற பின்பு மாயமானது உறுதி செய்யப்பட்டது. நீதிபதியின் செயலைக்கண்டு அதிர்ச்சிடைந்த தலைமை நீதிபதி, உடனடியாக மாயமான வழக்குகளின் ஆவணங்களை இருதரப்பினரிடம் இருந்தும் திரும்பப்பெற்று, அதை மறு கட்டமைப்பு செய்யும்படி உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு ஆணை பிறப்பித்தார்.

இந்நிலையில், மாயமான ஆவணங்களின் வழக்குகள் நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் மாயமான ஆவணங்களில் சிபிஐ விசாரித்த வழக்குகளின் ஆவணங்களும் உள்ளடங்கும். மாயமான 100க்கும் மேற்பட்ட வழக்குகளின் ஆவணங்களில் சிபிஐ விசாரித்த வழக்குகளின் ஆவணங்களும் சேர்ந்து காணமல் போயியுள்ளன. இதுகுறித்து உடனடியாக தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

அதன் பின்பு, மாயமான வழக்கு ஆவணங்கள் குறித்து முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு சிபிஐக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார்.

Label