OUR CLIENTS
தூய்மை நகரங்களில் பின்தங்கும் தமிழ்நாடு!
தூய்மை நகரங்களில் பின்தங்கும் தமிழ்நாடு! Posted on 20-Jul-2018 தூய்மை நகரங்களில் பின்தங்கும் தமிழ்நாடு!

சென்னை, ஜூலை 20-

இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலை கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.

ஒரு லட்சத்துக்கும் குறைவாக மற்றும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் தூய்மை அடிப்படையில் இந்த பட்டியலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட 2018&ம் ஆண்டுக்கான பட்டியலில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கான விருதினை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அளித்திருந்தார்.

நகர்ப்புற தூய்மை, கழிவு மேலாண்மை, மக்கள் தொகை போன்றவற்றின் அடிப்படையில் சிறுநகரங்கள் மற்றும் பெருநகரங்கள் என பட்டியல் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நகரங்களில் நடைபெற்று வரும் சேவைகள், நேரடியாக கள ஆய்வு, குடிமக்களின் கருத்துகளுக்கு ஏற்ப 4,000 புள்ளிகள் அளிக்கப்பட்டு அதில் அதிக புள்ளிகள் பெறும் நகரங்கள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

பட்டியலில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் தூய்மை நகரங்களின் விருது பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நகரம் கூட இடம்பெறவில்லை. ஆனால் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 3352 புள்ளிகள் பெற்று 13&வது இடத்தில் உள்ளது. இதிலும் விசித்திரம் என்னவென்றால் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கடந்த ஆண்டுகளில் பட்டிலியலில் முன்னிலையில் இருந்ததுதான்.

2015-ம் ஆண்டில் தூய்மை நகரங்களில் 2வதாக இருந்த திருச்சி, 2016-ம் ஆண்டில் 3-வது இடத்தையும், 2017-ம் ஆண்டில் 6-வது இடத்தையும் பெற்றுள்ளது. இந்த ஆண்டில் 13- வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த நகரம் முதலிடத்தை நோக்கி செல்வதை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் பட்டியலில் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

கோயம்புத்தூர் நகரம் 16-வது இடத்திலும், ஈரோடு 51-வது இடத்திலும், சென்னை 100-வது இடத்திலும் உள்ளன. மாநில அளவிலான பட்டியலில் ஜார்கண்ட் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாடு 13 வது இடத்தில் உள்ளது. இந்தூர் நகரத்தினை இந்திய நகரங்கள் தூய்மை இலக்கிற்கு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த நகரத்தில் தினசரி குப்பைகளை அகற்றும் பணி நடக்கிறது.

திட, திரவக் கழிவுகள் சுத்திகரிப்பு மேலாண்மை சிறப்பாக உள்ளன என அமைச்சகம் கூறியுள்ளது. இதற்கு காரணம் அந்த மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்பான செயல்பாடுகள்தான் என்றும் குறிப்பிட்டுள்ளது. தூய்மை நகரப் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்த தமிழக நகரம் 13 வது இடத்துக்கு பின்நோக்கி சரிவது தமிழக வளர்ச்சி ஆரோக்கியமாக இல்லை என்பதையே உணர்த்துகிறது.

Label