OUR CLIENTS
சட்டத்துக்கு எதிராக நடந்த அதிகாரிகள் சத்துணவுப் பணியாளர் இடமாற்றம்!
சட்டத்துக்கு எதிராக நடந்த அதிகாரிகள் சத்துணவுப் பணியாளர் இடமாற்றம்! Posted on 20-Jul-2018 சட்டத்துக்கு எதிராக நடந்த அதிகாரிகள் சத்துணவுப் பணியாளர் இடமாற்றம்!

திருப்பூர், ஜூலை 20-

சாதியைச் சுட்டிக்காட்டி போராட்டம் நடத்தியவர்களுக்குப் பயந்து அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சத்துணவுப் பெண் பணியாளரை இடமாற்றம் செய்த அதிகாரிகள் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி பகுதி திருமலைக்கவுண்டம் பாளையத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள சத்துணவு மையத்துக்கு பாப்பம்மாள் சத்துணவு சமையல் ஊழியராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் சமையல் செய்யக்கூடாது என்று ஆதிக்க சமூகத்தினர் சிலர் பள்ளிக்குள் புகுந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாப்பம்மாளை பள்ளியை விட்டு அனுப்பவேண்டும் என்று போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதனால் பள்ளி அதிகாரிகள் சத்துணவுத் துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததன் பேரில் பெண் பணியாளர் பாப்பம்மாளை அப்பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாற்றி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்த இடமாறுதலால் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், அங்குள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக சாதியைக் காட்டி போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு பயந்து அருந்ததி சமூகப் பெண் பணியாளரை இடமாற்றம் செய்ய யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது இது சட்ட விரோதம் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், கட்சிகள் போராட்டம் நடத்தின. மீண்டும் அவரை அதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இது குறித்து அரசுத் தரப்பில் வாய் திறக்காமல் மவுனம் காக்கின்றனர்.அரசிய லமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டு ஆதிக்க சாதியினரின் மிரட்டலுக்குப் பயந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

Label