OUR CLIENTS
சென்னையில் குறைந்த கட்டணத்தில் தொடங்கிய சத்யம் சினிமாஸின் ஐமேக்ஸ் திரையரங்கம்!
சென்னையில் குறைந்த கட்டணத்தில் தொடங்கிய சத்யம் சினிமாஸின் ஐமேக்ஸ் திரையரங்கம்! Posted on 20-Jul-2018 சென்னையில் குறைந்த கட்டணத்தில் தொடங்கிய  சத்யம் சினிமாஸின் ஐமேக்ஸ் திரையரங்கம்!

சென்னை, ஜூலை 20-

சென்னை வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமாஸின் லூக்ஸ் திரையரங்குகளில், ஐமேக்ஸ் என்கிற விசேஷத் திரைப்படத் தொழில்நுட்ப வசதியுடன் ஒரு புதிய திரையரங்கம் செயல்பட ஆரம்பித்தது.

ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன், ஜேம்ஸ் பாண்ட் நடித்த ஸ்பெக்டர் படம் 2015, நவம்பர் 20 அன்று திரையிடப்பட்டது.
இந்நிலையில் சென்னைக்கு மற்றொரு ஐமேக்ஸ் திரையரங்கம் கிடைத் துள்ளது. வடபழனியில் உள்ள விஜயா ஃபாரம் மாலில் அமைந்துள்ள சத்யம் சினிமாஸின் பலாஸோ திரையரங்குகளில் ஒன்று, ஐமேக்ஸ் திரையரங்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் பலாஸோ ஐமேக்ஸ் திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. 

வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமாஸில் ஐமேக்ஸ் திரையரங்கில் டிக்கெட் விலை ரூ. 552. இந்நிலையில் சத்யம் சினிமாஸின் இந்த பலாஸோ ஐமேக்ஸ் திரையரங்கில் டிக்கெட் விலை ரூ. 300 மட்டுமே (3டி கண்ணாடி மற்றும் இணையக்கட்டணம் தனி. 3டி கண்ணாடி + இணையக் கட்டணத்துடன் ரூ. 360) இதனால் குறைந்த விலையில் ஐமேக்ஸ் திரையரங்கில் படங்கள் பார்க்கும் வாய்ப்பு சென்னை திரைப்பட ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது.

சென்னை கோயம்பேட்டுக்கு அருகில் விஆர் மால் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதில் பிவிஆர் சினிமாஸின் திரையரங் குகள் உள்ளன. இதிலும் ஒரு ஐமேக்ஸ் திரையரங்கம் ஒன்று விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

Label