OUR CLIENTS
இதயத்தை கவர்ந்துவிட்ட ராகுல்காந்தியின் பேச்சு - சிவசேனா எம்.பி. பாராட்டு
இதயத்தை கவர்ந்துவிட்ட ராகுல்காந்தியின் பேச்சு - சிவசேனா எம்.பி. பாராட்டு Posted on 23-Jul-2018 இதயத்தை கவர்ந்துவிட்ட ராகுல்காந்தியின் பேச்சு - சிவசேனா எம்.பி. பாராட்டு

மும்பை, ஜுலை 23-

ராகுல்காந்தியின் பேச்சு இதயங்களை கவர்ந்துவிட்டது என்று சிவசேனா எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான பேச்சுக்கு சிவசேனா எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி வருமாறு:- பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் உலக கால்பந்து இறுதிப் போட்டியை நினைவு படுத்துகிறது. அதில் பிரான்ஸ் வெற்றிபெற்று கோப்பையை தட்டிச் சென்றாலும் குரோசியாவின் ஆட்டம் அனைவராலும் பேசப்படும் வகையில் இருந்தது.

அதுபோல் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் மோடி வெற்றிபெற்றாலும் ராகுல் காந்தியின் பேச்சு குரோசிய அணி பேசப்பட்டது போல் நாடு முழுவதும் பேசப்படுகிறது. ராகுல்காந்தி அரசியலில் 4,5 படிகள் உயர்ந்துவிட்டார். பிரதமர் மோடியை ராகுல் கட்டி அணைத்தது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. ராகுல் வெற்றிபெற்று விட்டார். பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி புதிய அவதாரம் எடுத்து இருக்கிறார்.

அதே சமயம் மோடியுடன் பேச்சு இப்போதுதான் ஒரு பிரதமருக்குரிய பேச்சு போல இருந்தது. மோடி...மோடி...தான் மோடியை யாருடனும் ஒப்பிட முடியாது. ஆனால் ராகுல்காந்தியின் பேச்சு பேச வைத்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Label