OUR CLIENTS
ஜனநாயகத்துக்கு ஆபத்தான ஆட்சி நடத்தும் மோடி! சோனியா சரமாரி தாக்கு
ஜனநாயகத்துக்கு ஆபத்தான ஆட்சி நடத்தும் மோடி! சோனியா சரமாரி தாக்கு Posted on 23-Jul-2018 ஜனநாயகத்துக்கு ஆபத்தான ஆட்சி நடத்தும் மோடி!  சோனியா சரமாரி தாக்கு

புதுடெல்லி, ஜுலை 23-

இந்தியாவின் ஜனநாயகத்தை சீரழிக்கும் ஆபத்தான ஆட்சியில் இருந்து மக்கள் மீட்கப்பட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். 

பாராளுமன்றத்துக்கு விரைவில் நடைபெறும் தேர்தலை சந்திக்க மத்தியில் ஆளும் பா.ஜனதாவும் எதிர்க்கட்சியான காங்கிரசும் தயாராகி வருகின்றன. புதிய கட்சிகளை இணைத்தும் பழைய கூட்டணியை வலுப் படுத்தியும் வருகின்றன. 

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விவாதிக்கவும், ஆலோசிக்கவும் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று கூடியது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்களும், காரிய கமிட்டி உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்களுக்கிடையில் உரையாற்றிய சோனியா காந்தி, இந்தியாவின் ஜனநாயகத்தை சீரழிக்கும் ஆபத்தான ஆட்சியில் இருந்து மக்கள் மீட்கப்பட வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ‘இந்தியாவில் ஒடுக்கப் பட்டவர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிராக அச்சவுணர்வும், நிலையற்ற தன்மையும் திணிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பேச்சுகளும், செயல்பாடும் இந்த அரசுக்கான ‘இறங்குமுக கவுன்ட் டவுன்’ தொடங்கி விட்டதை காட்டுகிறது. நாட்டின் ஜனநாயகத்தை சமரசம் செய்யும் இந்த ஆபத்தான ஆட்சியில் இருந்து மக்களை நாம் மீட்டாக வேண்டும்.

இந்த பெருமுயற்சியில் கூட்டணி களை உருவாக்கவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இணைந்து செயலாற்றவும் நம்மை அர்ப்பணித்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Label