OUR CLIENTS
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட ராகுல் வேண்டுகோள்
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட ராகுல் வேண்டுகோள் Posted on 23-Jul-2018 ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட ராகுல் வேண்டுகோள்

புதுடெல்லி, ஜுலை 23-

இந்திய நாட்டில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக நாம் போராடவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கட்சியினரிடம் நேற்று கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ் காரிய கமிட்டியின் முதல் ஆலோசனை கூட்டம் டில்லியில் ராகுல் காந்தி தலைமையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ”இந்தியாவில் சமூக நல்லிணக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியடைய  நானும் காங்கிரஸ் கட்சினரும் எப்போதும் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக இருப்போம்” என்று கூறினார்.

மேலும்,”2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப்படும் என்று பாஜக கூட்டணி அரசு தெரிவித்தது. ஆனால், அவ்வாறு அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்றால் வேளாண் துறையின் வளர்ச்சி விகிதம் 14 சதவீதமாக இருக்க வேண்டும். ஆனால் அது நடப்பதாக தெரியவில்லை” என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.

பின்னர் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,”புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் காரிய கமிட்டியில் அனுபவம் வாய்ந்த மற்றும் ஆற்றல்மிக்க நபர்கள் உள்ளனர். இந்த கமிட்டி இறந்தகால, நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை இணைக்கும் பாலமாக செயல்படும்” என்று கூறினார்.

மேலும்,”இந்திய நாட்டின் ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காக நாம் போராடவேண்டும்” என்று காங்கிரஸ் கட்சியினரிடம் கேட்டுக்கொண்டார். ”இந்தியாவின் குரலாக காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. ஆகையால் நமக்கு பெரும் பங்கு உள்ளது” என்று கூறிய ராகுல் காந்தி வரவிருக்கும் காலங்களில் கட்சியின் கடமைகள் குறித்து எடுத்துரைத்தார்.

Label