OUR CLIENTS
பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்ற 65 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள்
பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்ற 65 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் Posted on 23-Jul-2018 பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்ற 65 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள்

சேலம், ஜூலை 23-

 தமிழகத்தில் உயர்நீதிமன்ற வழக்கு நிலுவையால், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறாமலேயே 65 பட்டதாரி ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக, பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வு வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக, ஒரு தரப்பு ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வு வழங்க நீதிமன்றம் தடை விதித்தது.

இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 1,400 உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாகவே உள்ளது. இதனிடையே, பதவு உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதால், முன்னுரிமை பட்டியலில் இருந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, வயது முதிர்வின் காரணமாக இதுவரை 65 பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக ஆகாமலேயே ஓய்வு பெற்றுசென்றுவிட்டனர். எனவே, ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறியதாவது: உரிய நேரத்தில் பதவி உயர்வு வழங்காததால், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதுடன், பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உபரியாக இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. 
சமீபத்தில் நடந்த கலந்தாய்வில், உபரி பணியிடம் என யாரையும் கட்டாய மாறுதல் செய்ய  வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. இதுஒருபுறம் இருக்க, அனைத்து தகுதி மற்றும் வாய்ப்பு இருந்தும், தலைமை ஆசிரியராக முடியாமல் போனதால், பட்டதாரி ஆசியர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 65 ஆசிரியர்கள் பதவிஉயர்வு பெறாமலேயே ஓய்வுபெற்று சென்றுவிட்டனர். இதனால், ஒவ்வொருவரும் வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய பலன்கள் என குறைந்தபட்சம் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை இழப்பை சந்தித்துள்ளனர். நீதிமன்ற தடையால் பதவி உயர்வு வழங்கவில்லை என்றாலும் கூட, இவர்களுக்கான இழப்பீட்டை யார் திரும்ப அளிப்பது? எனவே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுந்த  வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய பலன்களை திருப்பி வழங்க வேண்டும். இதேபோல மேலும் 80 பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறாமலேயே விரைவில் ஓய்வுபெற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

எனவே தகுதி வாய்ந்தவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.பெற்றுசென்றுவிட்டனர். எனவே, ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Label