OUR CLIENTS
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விஜய் ரசிகர்களை மொத்தமாக வளைக்கும் பணியில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விஜய் ரசிகர்களை மொத்தமாக வளைக்கும் பணியில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி! Posted on 23-Jul-2018 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விஜய் ரசிகர்களை மொத்தமாக வளைக்கும் பணியில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி!

கிருஷ்ணகிரி, ஜூலை 23-

கிருஷ்ணகிரி மாவட்ட இளைய தளபதி விஜய் ரசிகர்களை வளைத்துப் போடும் பணியில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தீவிராக ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூப்பர் ஆக்டர் காதல் இளவரசன், உலக நாயகன் என்றும், ஆண்டவன் என்றும் அழைக்கப்படும் கமல்ஹாசன் ஆகியோருக்கு அடுத்தபடியாக அரசியலில் பரபரப்பாக பேசப்படுபவர் இளையதளபதி விஜய். இவரை தங்கள் கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுக்க வைக்க அதிமுகவும், திமுகவும் அவர்களுக்கே உரிய தனித்தனி பாணியில் முட்டி மோதி வருகின்றன.

இதில் திமுக தரப்பு சன் குழுமம் சகோதரர்கள் மாறன்கள் வாயிலாக விஜய்க்கு திமுக பிராண்ட் முத்திரை குத்தும் விதமாக சர்கார் படத்தை தயாரித்து அதன் வாயிலாக ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. ஆனால் என்னதான் வலை விரித்தாலும் திமுக பக்கம் விஜய் போக மாட்டர். அவர் அதிமுக மீது ஒரு நட்பு வைத்துள்ளார். காரணம் விஜய்யின் முந்தைய படமான மெர்சல் படம் பாஜகவில் எதிர்ப்பை மீறி வெளியாக காரணமே முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். அத்தோடு அவரது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களில் ரசிகர்களின் அழைப்பை ஏற்று முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து தருகின்றனர் என்று அவரது  ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும் விஜய்யின் சமீபத்திய 44&வது பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட அமைச்சரான பாலகிருஷ்ணா ரெட்டி மாவட்ட எல்லையில் ஒரு பெரிய விழாவை ஏற்பாடு செய்துள்ளார். அதில் இலவச ஹெல்மெட், புடவை, குடம், நோட்டுப்புத்தகம் என்று நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்டத்தில் உள்ள விஜய்யின் ரசிகர் மன்றத்தினை தன் பக்கம் முழுவதுமாக இழுத்து விட்டாராம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை சாதி ஓட்டுக்களை குறிவைக்க முடியாது. இந்த சாதிகளை கடந்து மாவட்டத்தில் உள்ளது விஜய் ரசிகர்களின் பலம்தான். ரஜினி. கமல், அஜித், மூவரை விட இம்மாவட்டத்தில் உள்ளது விஜய் ரசிகர்களின் பலம்தான். ரஜினி, கமல், அஜீத், மூவரை விட இம் மாவட்டத்தில் வினய் ரசிகர் மன்றங்கள்தான் அதிகம், அதை கணக்கு போட்டுதான் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி இந்த பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத்தியுள்ளார் மாவட்ட அதிமுகவினர். எது எப்படியோ விஜய் நடிப்பது திமுக பிராண்ட் தயாரிப்பான சன் பிக்சர்ஸ் திரைப்படமாகும்.

நட்பு கொள்வது அதிமுக. முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதைமே சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர். ஆக மொத்தம் நடைபெறவுள்ள பாராளுமன்ற «த்தலில் கிருஷ்ணகிரி தொகுதியை யார் கைப்பற்றுவார்கள் என்பதை பார்த்தால் தெரிந்து விடும்.

Label