OUR CLIENTS
காரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வன்முறையாளர்கள் 11 பேர் கைது!
காரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வன்முறையாளர்கள் 11 பேர் கைது! Posted on 23-Jul-2018 காரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வன்முறையாளர்கள் 11 பேர் கைது!

வேலூர், ஜூலை 23-

வேலூரில் காரில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வன்முறையாளர்கள் 11 பேரை போலீசார் கைது செய்தனர். 

வேலூர் மத்திய ஆலயத்துக்கு (சிஎஸ்ஐ சர்ச்) அனைத்து மத மக்களும் வந்து செல்வது வழக்கம். சமீபகாலமாக ஆலயத்துக்குள் பதட்டமாண சூழல் நிலவி வந்தது. இங்கு ஆலய உறுப்பினர்களை கொண்ட நிர்வாகக் குழு என்கிற அமைப்பு உள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த நிர்வாகக் குழு கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும். பின்னர் புதிய நிர்வாகக்குழு அமைக்கப்படும்.

இந்த குழுவுக்கு ஆலய தலைமை போதகர் தலைமைப்பொறுப்பு வகிப்பார். அதன்படி தற்போது மத்திய ஆலயத்தின் அனைத்து நிர்வாகங்களையும் கவனிப்பது ஆயர் சாதுசத்யராஜ் ஆவார். ஆலயத்தின் நிர்வாகக்குழு தேர்தல் நடத்தவேண்டிய காலம் முடிந்தபின்னும் தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்தியதோடு இல்லாமல் நிர்வாகக் குழுவை கலைத்து தனக்கு வேண்டப்பட்டவர்களை வைத்து புதியதாக நிவாகக்குழு  அமைத்து நடத்தி வந்துள்ளார். இதனால் ஆலயத்தின் உறுப்பினர்கள் தேர்தல் நடத்த வலியுறுத்தியும் தட்டிக்கழித்த ஆயர் சாது சத்தியராஜ் புதியதாக ஆலயத்துக்கு வந்த தேவா, வேதா, அன்பு ஆகியோரை உடன் வைத்துக்கொண்டு புதிய நிர்வாகக் குழு குறித்து கேள்வி கேட்போரை அடக்கி வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (22ம் தேதி) ஞாயிறு காலை ஆராதனை முடிந்தபின் வருடாந்திர ஆலய பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜான்சன்பாபு என்பவர் ஆலய நிர்வாகக் குழு தேர்தல் நடத்த வேண்டி ஆயர் சாதுசத்தியராஜிடம் வலியுறுத்தியுள்ளார். அப்போது ஆலயத்துக்குள் வந்த தேவா, வேதா, அன்பு மற்றும் 10 பேர் கொன்ட கும்பல் தேர்தல் குறித்து பேச வேண்டாம் என தகராறு செய்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு இடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது.

ஆயர் சாதுசத்தியராஜ் கொடுத்த தகவலின் பேரில் ஆலயத்துக்குள் வந்த வடக்கு காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட காவலர்கள் பிரச்னை செய்தவர்களை பிடித்துச் சென்று விசாரணை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து தேவா தரப்பில் 5 பேரையும்,  ஜான்சன்பாபு தரப்பில் 6 பேரையும் கைது செய்துள்ளனர்.

வேலூர் பேராயத்தின் கீழ் இயங்கிவரும் மத்திய ஆலயத்தில் பணிபுரிவோரை பணியமர்த்தவும், பணியிடமாறுதல்  செய்யவும் பேராயத்துக்கு அதிகாரம் உண்டு. ஏற்கனவே ஆயர் சாதுசத்தியராஜை வேறு ஆலயத்துக்கு  பணியிடமாறுதல் செய்து ஆணை வழங்கியும் அவர் போக மறுத்துள்ளார். இதுகுறித்து கேள்வி கேட்போரை தேவா சகோதரர்கள் மூலம் மிரட்டியுள்ளார். இதுவே பிரச்னைக்கு காரணம் என ஆலய வட்டாரம் தெரிவிக்கிறது.

மேற்கூறிய தேவா சகோதரர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. காரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காரில் இருந்த கைத்துப்பாக்கி, வீச்சரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Label