OUR CLIENTS
சொத்து குவிப்பு வழக்கு விசாரணையால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி!
சொத்து குவிப்பு வழக்கு விசாரணையால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி! Posted on 27-Jul-2018 சொத்து குவிப்பு வழக்கு விசாரணையால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி!

சென்னை, ஜுலை 27-

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கடும் நெருக்கடியாகவே பார்க்கப்படுகிறது. 

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒன்றாக இணைந்து அ.தி.மு.க.வை கைப்பற்றினர். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர் பொறுப்பை வகிக்கிறார். எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்த பின்னரும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்கிற மன வருத்ததிலேயே உள்ளனர். அது நீடித்துக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தி.மு.க. சார்பில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அதில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை. இது தொடர் பாக ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட்டு ஓ.பன்னீர் செல்வம் மீதான வழக்கு விசாரணையை ஏன் சி.பி.ஐ.க்கு மாற்றக்கூடாது என்று கேள்வி எழுப்பியதுடன் உரிய விசாரணையை நடத்தவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் மீது உரிய விசாரணை நடைபெற்று வருவதாக தமிழக அரசும் ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்துக்குவிப்பு விசார ணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே அறப்போர் இயக்கம் சார்பிலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அதனை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான விவகாரம் இதுபோன்ற நடவடிக்கை களால் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது ஓ.பன்னீர் செல்வத்திற்கு கடும் நெருக்கடியாகவே பார்க்கப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகளால் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். லஞ்ச ஒழிப்பு விசாரணை ஓ.பன்னீர் செல்வத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணை முடிவுகள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் உடல் நலமின்றி இருக்கும் தனது தம்பிக்காக ஓ.பன்னீர் செல்வம் ராணுவ மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் ராணுவ ஹெலிகாப்டரை கேட்டு பயன்படுத்தியதும் சர்ச் சையை ஏற்படுத்தியது.

இதற்கு நன்றி தெரிவிப்பதற்காக டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வத்தை நிர்மலா சீத்தாராமன் சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பியதும் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. சமூக வலை தளங்களிலும் இந்த விவகாரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Label