OUR CLIENTS
கருணாநிதி உடல்நிலை வெங்கய்ய நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு
கருணாநிதி உடல்நிலை வெங்கய்ய நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு Posted on 30-Jul-2018 கருணாநிதி உடல்நிலை வெங்கய்ய நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு

சென்னை, ஜுலை 30-

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் காவேரி மருத்துவமனை டாக்டர்கள் குழு சனிக்கிழமை இரவு 8 மணியளவில் 2வது அறிக்கையை வெளியிட்டது. தொடர் மருத்துவ சிகிச்சை காரணமாக அவரது உடல்நிலை சீராக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவருக்குத் தேவையான கண்காணிப்பையும், சிகிச்சையையும் மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து அளித்து வருகிறது.

கருணாநிதி மேலும் இரண்டு நாள்கள் மருத்துவ மனையில் இருந்து சிகிச்சை பெறுவார் என்று திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க நேற்று பகல் 1:00 மணியளவில் காவேரி மருத்துவமனை வந்தார்.

அங்கு ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரிடம் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர் ஜெயகுமார் ஆகியோரும் உடனிருந்தனர். பின்னர், கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நேரில் சென்று அவரைப் பார்த்தார்.

இச்செய்தியை வெங்கய்யா நாயுடு தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், 'துக்ளக்' ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, ஜி.ராமகிருஷ்ணன், இசைய மைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து, முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே, நடிகர்கள் நாசர், பிரபு, பொன்வண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் மு.க. ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடம் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

இதன்பின்னர், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்தடைந்தனர். முக்கியப் பிரமுகர்களின் தொடர் வருகை காரணமாக காவேரி மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, மு.க.அழகிரி, இல.கணேசன், முரளீதரராவ், சீமான், டி.ராஜா, கி,வீரமணி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

Label