OUR CLIENTS
புதிய இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இளைஞர்கள் -பிரதமர் மோடி பெருமிதம்
புதிய இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இளைஞர்கள் -பிரதமர் மோடி பெருமிதம் Posted on 30-Jul-2018 புதிய இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இளைஞர்கள் -பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி, ஜுலை 30-

புதிய இந்தியாவை உருவாக்கு வதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றி வருவதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாத இறுதியில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் அகில இந்திய வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சி வழியே பொதுமக்களிடம் உரையாற்றுவார்.
இந்நிலையில் இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி,”இந்த தருணத்தில் பள்ளி படிப்பினை முடித்த இளம் மாணவ மாணவியர்கள், கல்லூரிகளில் சேர இருக்கின்றனர். மாணவர்கள் அனைவரும் அமைதியாக செய லாற்றுங்கள்.  மகிழ்ச்சியாய் இருங்கள். சொந்த வீட்டை விட்டு, சொந்த கிராமத்தினை விட்டு மற்றும் பாதுகாப்பு மிக்க சூழ்நிலையில் இருந்து நீங்கள் இப்போது வெளியேறு கிறீர்கள். தங்களது வாழ்வின் புதிய திசையை நோக்கி இளம் மாணவ மாணவியர் முதல் அடி எடுத்து வைக்கும் தருணமிது” என கூறினார்.

”மாணவர்களின் ஆர்வம் எப்போதும் குறையக்கூடாது. புத்தகத்திற்கு மாற்று ஒன்றும் இல்லை. ஆகையால் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். அதேசமயம் புதிய விஷயங்களை கண்டுபிடிக்க வேண்டும். திறமைகள், மொழிகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் சிறந்துவிளங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். ”நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இளம் தலை முறையினர் மேற்கொண்டு வரும் பணிகள் மற்றும் சாதனைகளை பற்றி பேசிய பிரதமர் மோடி, ஒரு புதிய இந்தியாவை உருவாக்கு வதில் இளைஞர்கள் பங்காற்றி வருகின்றனர்” என பிரதமர் மோடி கூறினார்.

சில பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. சில மாநிலங்கள் பருவமழையை எதிர்நோக்கியுள்ளன. இந்தியா மிகப்பரந்து விரிந்த நாடு. சில நேரங்களில் கனமழை மக்களுக்கு பெரிய தொந்தரவுகளை கொடுக்கும். இது, இயற்கையுடன் நாம் முரண்படுவதால் நடக்கிறது. இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளத்தில் சமநிலை நிலவுவதை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

சமூக கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஞானிகளின் போதனைகள் நாட்டின் லட்சக்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும். அவர்களது போதனைகள் மூட நம்பிக்கைக்கு எதிராக நாம் நம்பிக்கையுடன் போராட உதவும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Label