OUR CLIENTS
கேரள முதல்வர் பினராயி விஜயனை விடுவித்தது தவறு உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு
கேரள முதல்வர் பினராயி விஜயனை விடுவித்தது தவறு உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு Posted on 30-Jul-2018 கேரள முதல்வர் பினராயி விஜயனை விடுவித்தது தவறு உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு

திருவனந்தபுரம், ஜுலை 30-

லாவ்லின் மின் திட்ட முறைகேடு வழக்கில் பினராயி விஜயனை ஐகோர்ட் விடுவித்ததற்கு எதிராக சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் இருந்து வருகிறார். இவர் கடந்த 1997&ம் ஆண்டு கேரள மந்திரி சபையில் மின்சாரத்துறை மந்திரியாக இருந்த போது கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 3 நீர்மின் திட்டங்களை செயல்படுத்த ‘எஸ்.என்.சி. & லாவலின்’ என்ற கனடா நாட்டு நிறுவனத்துடன் கேரள அரசு ஒரு ஒப்பந்தம் செய்தது.

இந்த திட்டத்தை செயல் படுத்த திட்ட விதிகளில் பினராயி விஜயன் திருத்தம் செய்து அதற்கு அனுமதி அளித்தார் என்றும் இதன் மூலம் ரூ.86.25 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. மேலும் மின்சாரத்துறை முதன்மை செயலாளர் மோகனசந்திரன், உயர் அதிகாரிகள் பிரான் சிஸ், கஸ்தூரி ரெங்க அய்யர், ராஜசேகரன் நாயர், சிவதாணு ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக கேரள லஞ்ச ஓழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் கடந்த வருடம் 2017&ம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து பினராயி விஜயனை கேரள ஐகோர்ட்டு விடுவித்தது. 

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் லாவ்லின் மின்திட்ட ஊழல் புகாரில் பினராயி விஜயனை கேரள ஐகோர்ட்டு விடுவித்தது தவறு. லாவ்லின் நிறுவனம் மின்திட்டத்திற்கு பொருட்களை வினியோகம் செய்யும் ஏஜென்சியாக இந்த திட்டத்தில் முதலில் இணைந்தது. ஒரு வருடத்தில் அந்த நிறுவனமே அனைத்து பொருட்களையும் வினியோகம் செய்யும் நிறுவனமாக மாறியது. 

மேலும் லாவ்லின் நிறுவனத்தின் விருந்தினராக பினராயி விஜயன் வெளிநாடு சென்று வந்துள்ளார். எனவே இந்த மின்திட்டத்தில் ஊழல் நடந்து உள்ளது. இந்த வழக்கை பினராயி விஜயன் சந்திக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 12 பக்கத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. லாவ்லின் மின் திட்ட ஊழல் தொடர்பாக பினராயி விஜயனுக்கு எதிராக சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இந்த மனுவால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Label