OUR CLIENTS
பிச்சனூரில் நன்கொடையாக வழங்கிய கட்டடத்தில் மகளிர் நூலகத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள்!
பிச்சனூரில் நன்கொடையாக வழங்கிய கட்டடத்தில் மகளிர் நூலகத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள்! Posted on 30-Jul-2018 பிச்சனூரில் நன்கொடையாக வழங்கிய கட்டடத்தில் மகளிர் நூலகத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள்!

வேலூர், ஜூலை 30-

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சி பிச்சானூர் தேரடி அழகு பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் புலவர் கா.நடராசன் வாழ்ந்து வந்த ரூ.1 கோடி மதிப்பிலான தன்னுடைய வீட்டை மகளிர் நூலகம் இயங்க நன்கொடையாக வழங்கிய வீட்டில் மகளிர் நூலகத்தை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நீலோபர் கபில் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் வீரமணி பேசியதாவது: தமிழகத்தை ஆட்சி புரிந்த பெரிய தலைவர்கள் எல்லாம் பல்வேறு புத்தகங்களை படித்து தங்கள் அறிவை வளர்த்து கொண்டு தங்களது பேச்சாற்றலால் மக்களை கவர்ந்தும் ஈர்த்தும் வந்துள்ளனர் அதனடிப்டையில் இந்த நூலகங்கள் மாணவர்களின் இளைஞர்களின் அறிவாற்றலை பெருக்கிட மிகவும் உதவியாக இருந்து வருகிறது.

நமது குடியாத்தம் நகரம் பல்வேறு சிறப்புகளை பெற்றதாகும். கர்மவீரர் காமராஜர் முதன்முதலில் வெற்றிப்பெற்ற சட்டமன்ற தொகுதி குடியாத்தமாகும்;. இந்திய தேசிய கொடியை முதலில் வடிவமைத்த இடமும் நமது குடியாத்தமாகும். அதனடிப்படையில் இங்கு இன்று ரூ.1 கோடி மதிப்புடைய கட்டடத்தை தானமாக மகளிர் நூலகம் அமைய வழங்கியிருக்கும் புலவர் கா.நடராசனை பாராட்டுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏற்கெனவே இயங்கி வரும் நூலகம் கூட ஒருவர் தானமாக கொடுத்த கட்டடத்தில் தான் இயங்கி வருகிறது. இவர்களை போல கொடையாளர்கள் நிறைந்த இந்த நகரத்தில் இன்று இந்த விழா நடைபெறுவது மிகவும் பாராட்டுதலுக்குரியது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் அவற்றை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பெண்கள் மேம்பாட்டிற்காக தனியாக வாரியம் அமைத்து பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் மறைந்த முதல்வர் அம்மா அவர்கள். அந்த வழியில் இன்று இந்த மகளிர் நூலகம் இப்பகுதியில் உள்ள மாணவிகளுக்கு மட்டுமில்லாமல் குடும்ப பெண்களுக்கும் பல்வேறு உலக நடப்புகளை அறிந்து கொண்டு பயனடையும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த நூலக கட்டடத்தில் தமிழ்நாடு தேர்வாணைய பயிற்சி மையம் அமைக்கவும் ஏற்கெனவே உள்ள நூலக கட்டடம் சிறிது பழுதுகள் ஏற்பட்டுள்ளது, அவற்றை புதுபிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே இந்த நகரத்தில் உள்ள பெண்கள் மகளிர் நூலகத்தை பயன்படுத்தி பயனடை வேண்டுமென அமைச்சர் வீரமணி கேட்டுக்கொண்டார்.

விழாவில் அமைச்சர் நீலோபர் கபில் பேசியதாவது: மனித தோன்றலில் இருந்து படிப்படியாக மனித இனம் வளா;ந்து வந்துள்ளது. மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு படிப்பறிவு மிகவும் முக்கிய காரணியாகும். மனிதன் தன்னுடைய  அறிவாற்றலால் உலகை தன் வசபடுத்தியுள்ளான். இந்த அறிவைபெற புத்தகங்கள் முக்கிய பங்காக மனிதனுக்கு இருந்து வந்துள்ளது. படிக்க பணம் இல்லை என்று படிக்காத பெரிய தலைவர்கள் அறிஞர்கள் எல்லாம் நூலகத்திலுள்ள நூல்களை படித்து அவற்றின் மூலம் தங்கள் அறிவை வளர்த்து கொண்டு சிறந்து விளங்கினார்கள்.

இன்றைய நவீன காலத்தில் உள்ள கைபேசிகள் கணினிகள் எல்லாவற்றையும் விட புத்தகங்கள்தான் காலத்தால் அழியாத செல்வமாக என்னென்றும் விளங்கும். அதனடிப்டையில் இன்று பெண்களுக்காக தனியாக நூலகம் அமைத்திட ஒரு கோடி மதிப்பிலான கட்டடத்தை வழங்கிய புலவர் கா.நடராசனுக்கு என் நன்றிகளை
தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு வேலைவாய்ப்பு பயிற்சித்துறையின் மூலம் பல்வேறு நூலகங்களில் வேலைவாய்ப்பு குறித்த திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பை இந்த நூலகத்தில் நடத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே இவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டு மெனவும், வாணியம்பாடியில் உள்ள நூலகத்தில் புதியதாக மகளிர் நூலகம் அமைக்க தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விழாவில் பேசினார்.

மாவட்ட நூலக அலுவலர் க.ஆனந்தன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி லோகநாதன், கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்கள் தாளாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜே.கே.என்.பழனி, அரசு வழக்குரைஞர் கே.எம்.பூபதி, வாசகர் வட்ட தலைவர் முல்லைவாசன், செந்தமிழ்க்கூத்தன், புலவர் கா.நடராசன், த.ம.சிவக்குமார், நூலக ஆணைக்கழு கண்காணிப்பாளர் ஆ.ச.மதன், நூலகர் ரவி, மற்றும் மாணவ, மாணவிகள் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Label