OUR CLIENTS
தொழுநோயாளி பெண்ணுக்காக கட்டப்பட்ட பசுமை வீடு மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு!
தொழுநோயாளி பெண்ணுக்காக கட்டப்பட்ட பசுமை வீடு மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு! Posted on 30-Jul-2018 தொழுநோயாளி பெண்ணுக்காக கட்டப்பட்ட பசுமை வீடு மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு!

வந்தவாசி, ஜூலை 30-

 திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரைச் சேர்ந்த தொழுநோயாளி பெண் மல்லிகாவின் பசுமை வீட்டை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் சென்று திறந்து வைத்து அந்த பெண்ணை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தார்.

  வந்தவாசி நகரம், கோட்டை அகழியை  ஒட்டியவாறு இருந்த  சிறிய குடிசை வீட்டில் வசித்தவர் மணி. இவரது மனைவி மல்லிகா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகா தொழுநோயால் பாதிக்கப்பட்டார். வறுமையில் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு ஒரு தொண்டு அமைப்பு உதவி வந்தது.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி வந்தவாசியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக வந்த மாவட்ட ஆட்சியரிடம் மல்லிகா இலவச வீட்டு மனை கேட்டு மனு அளித்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் ஒரே வாரத்தில் வந்தவாசி அடுத்த சளுக்கை கிராமத்தில், மல்லிகா&மணி தம்பதியருக்கு இலவச வீட்டு மனை பட்டாவினை  ஜனவரி மாதம் 12ம் தேதி நேரில் சென்று வழங்கினார். இந்த மனையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி ரூபாய் 2.10 லட்சம் மதிப்பிலான பசுமை வீட்டினை வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகம் நேரடி மேற்பார்வையில் கட்டியது.

இந்த வீட்டினை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் சென்று நேற்று திறந்து வைத்தார். மேலும் அங்கே வாழக்கூடிய இருளர் இன மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்த அவர், 5 பேருக்கு பட்டா வழங்கினார். இருளர் இன மக்கள் வாழக்கூடிய வீடுகளை பார்வையிட்டார். அப்பொழுது கோரிக்கை வைத்த ஒரு பெண்ணுக்கு புதியதாக பட்டா வழங்கவும் உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியின்போது, கோட்டாட்சியர் அன்னம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி, வட்டாட்சியர் முரளிதரன், அருவி அறக்கட்டளை ரூபன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Label