OUR CLIENTS
வேலூரில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
வேலூரில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்! Posted on 30-Jul-2018 வேலூரில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

வேலூர், ஜூலை 30-

இந்து கோயில்களின் சொத்து கோயிலுக்கே, தமிழக அரசே வெளியேறு என்கிற கருத்தை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணி அமைப்பினர்  நடத்தினர்.

வேலூர் மண்டித்தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர ஒருங்கிணைப்பாளர் ஆதிமோகன் தலைமை வகித்தார்.  டி.கே.டி.சீனிவாசன். தனசேகர், அன்புமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரளான தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில்  கீழ்கண்டவாறு பேசினர்.

மக்களின் நிர்வாகத்தில் கோயில்கள் இருந்தவரை கோயில்கள் சிறப்புடன் விளங்கின. எப்போது கோயில்கள் அரசியல்வாதிகளின் கைகளுக்கு சென்றதோ அப்போதே சர்வ நாசமாக தொடங்கியது. அறுபது ஆண்டுகளுக்கு முன் ஐந்து லட்சத்து இருபத்து ஐந்தாயிரம் அளவில் இருந்த கோயில் நிலங்கள் நான்கு லட்சத்து ஏழுபத்து ஐந்தாயிரம் ஏக்கராக சுருங்கிவிட்டது. சுமார் ஐம்பதாயிரம் ஏக்கர் நிலங்கள் கொள்ளை போயுள்ளன. ஆண்டிற்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் வருமானம் வரவேண்டிய கோயில் நிலம் மற்றும் குத்தகை தொகை இந்த ஆண்டு நூற்று இருபது கொடிதான் வசூல் ஆனதாக அரசு அறிவித்துள்ளது.

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், பழநி முருகன் கோயில் உட்பட ஆயிரக்கணக்கான கோயில்களில் ஆயிரத்து எழுநூறு சிலைகள் போலியானவை என பொன்மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. சாலை விவாக்கம் காரணமாக நூற்றுக்கணக்கான கோயில்கள் அகற்றப்பட்டபோது அறநிலையத்துறை கையில் வைத்திருக்கும் அரசு இடத்தை கோயிலுக்கு தராமல் வாய் மூடி மௌனம் காத்தது, கடந்த அறுபது ஆண்டுகளில் சுமார் இரண்டாயிரம் கோயில்களைக் காணவில்லை என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத்தல புனர்நிர்மான செலவுக்காக ஆண்டுக்கு , நூற்று இருபத்தைந்து  கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் இருந்து அரசு வாரி இறைக்கிறது. ஆனால் இந்து கோயில்களில் கட்டண தரிசனம் என்ற பெயரில் பக்தர்களிடம் கொள்ளையடிக் கப்படுகின்றது.  கோயில்களில் நடக்கும் முறைகேட்டை தடுக்க, ஊழலை,  ஒழிக்க, சிலைத்திருட்டை தடுக்க கோயிலைப் பாதுகாக்க ஒரே வழி இந்து கோயில்களை இந்து ஆன்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டு அரசு ஆலயத்தை விட்டே வெளியேற விடும் என்ற கருத்துக்களை வலியுறுத்தி பேசினர். கோயில் என்ன டோல்கேட்டா? பக்தர்களிடம் கொள்ளையடிக்க!! சர்ச் சொத்து கிறிஸ்தவரிடம், மசூதி சொத்து முஸ்லிமிடம், கோயில் சொத்து திருடர்களிடமா? என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். 

Label