OUR CLIENTS
பராமரிப்பு பணிகளை தொடர அனுமதி மறுப்பு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை ரத்து செய்ய முடியாது -தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி
பராமரிப்பு பணிகளை தொடர அனுமதி மறுப்பு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை ரத்து செய்ய முடியாது -தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி Posted on 31-Jul-2018 பராமரிப்பு பணிகளை தொடர அனுமதி மறுப்பு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை ரத்து செய்ய முடியாது -தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

புதுடெல்லி, ஜுலை 31-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அரசாணையை ரத்து செய்ய முடியாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாற்றப்பட்டு, 13 பேர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இந்த விவகாரத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்திய தமிழக அரசு அந்த ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது.

அதன்படி, கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசா ணையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் முறையீடு செய்திருந்தது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையின் பராமரிப்பு பணிகளை மீண்டும் தொடர அனுமதி கோரியும் அந்நிறுவனம் முறையிட்டுருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. மேலும், ஆலை பராமரிப்பு பணிகளை தொடரவும் அனுமதிக்க முடியாது என வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆகஸ்ட் 9&ம் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

Label