OUR CLIENTS
அசாமில் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லை -மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு
அசாமில் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லை -மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு Posted on 31-Jul-2018 அசாமில் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லை -மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு

புதுடெல்லி, ஜுலை 31-

வங்கதேசத்தில் இருந்து அசாமில் குடியேறியவர்களில் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லை என்று வரைவு அறிக்கை வெளியிட்டதற்கு மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

அசாமில் தேசிய மக்கள் தொகை பதிவேடு இறுதி வரைவு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.  இதில் 40 லட்சம் பேர்  சட்டவிரோதமாக  குடியேறியவர்கள் என  குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேற்கு  வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இது குறித்து கூறியதாவது;-

40 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா? அவர்களுக்காக மறுவாழ்வு திட்டம் உள்ளதா? இறுதியில் இதனால்  மேற்கு வங்காளமும் பாதிப்படையும் . இது வெறும் ஓட்டு அரசியல்.
ஆதார் அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட் வைத்திருக்கும் மக்கள் இருந்தனர்.  ஆனால் அவர்களின் பெயர்கள் வரைவு பட்டியலில் இல்லை.  மேலும் பட்டப்பெயர் அடிப்படையில் லட்சகணக்கான  மக்கள் பெயர்கள் அகற்றப்பட்ட்டு உள்ளன.  ஒரு பெரிய வெளியேற்றம் செய்ய  அரசாங்கம் முயற்சி செய்கிறதா?

விளையாட்டான திட்டத்தின் மூலம் மக்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். தங்கள் சொந்த நாட்டிலேயே  மக்கள்  அகதிகளாக இருப்பதால் கவலைப்படுகிறோம். வங்காள மொழி பேசும் மக்களையும், பீகாரீகளையும் தூக்கி எறிவதற்கான ஒரு திட்டம் இது. இதன் விளைவுகள் நம் மாநிலத்திலும் உணரப்படும்.
ஆவணங்கள் உள்ளவர்களையும் குடிமகன்களாக ஏற்க தேசிய பதிவுத்துறை மறுப்பு தெரிவித்து உள்ளது. 2019தேர்தலை முன்னிட்டு பாஜக நடத்தும் நாடகம்.

நான் அசாம் செல்ல முயற்சி செய்கிறேன், என் எம்.பி.க்கள் ஏற்கனவே  அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டுளார்களா  அல்லது இல்லையா என பார்ப்போம் என கூறி உள்ளார்.

Label