OUR CLIENTS
திட்டங்கள் தாமத விவகாரம் அரசு மெத்தன போக்குக்கு பாராளுமன்றம் கடும் கண்டனம்
திட்டங்கள் தாமத விவகாரம் அரசு மெத்தன போக்குக்கு பாராளுமன்றம் கடும் கண்டனம் Posted on 31-Jul-2018 திட்டங்கள் தாமத விவகாரம் அரசு மெத்தன போக்குக்கு பாராளுமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி, ஜூலை 31-

துய்மை இந்தியா, ஏழைகளுக்கான வீட்டு வசதி திட்டம் உள்ளிட்டவற்றை நிறை வேற்றுவதில் மெத்தன போக்கை கடைபிடிப்ப தாக கூறி, மத்திய அரசை, பார்லிமென்ட் குழு கண்டித்துள்ளது.

நகர்ப்புற மேம்பாட்டு துறைக்கான, பார்லி., நிலைக்குழு, மார்ச்சில், 22வது பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்தது. அதை தொடர்ந்து, 23வது அறிக்கையை, சமீபத்தில், அந்த குழு சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மார்ச்சில், பார்லி., குழு அளித்த, 22வது பரிந்துரை அறிக்கைக்கு, மத்திய அரசு பதில் அளித்தது.அதில், 'மாநிலங்களில் திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசு ஒப்புதல் அளிக்கிறது; இந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்குதல், பயன் படுத் துதல் ஆகியவை, இயல்பான நடைமுறைகள். 'இவற்றின் மூலம், திட்டங்கள் செயல்படுகின்ற னவா என்பதை உறுதியாக கூறமுடியாது' என,கூறப்பட்டிருந்தது.

ஆனால், திட்டங்களின் முன்னேற்றத்தை அறிவதற் கான வரையறைகளை, மத்திய அரசு தெளிவாக வகுக்கவில்லை.மத்திய அரசின், துய்மை இந்தியா, ஏழைகளுக்கான வீட்டு வசதி திட்டம் போன்றவை சிறப்பான முறையில் செயல்படுத்தப்படவில்லை. மக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி, திட்டங் களை முறை யாக செயல்படுத்த வேண்டும். இந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப் படாத தற்கான காரணங்களை அறிந்து, அதற்கு தீர்வு காண, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Label