OUR CLIENTS
பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடிப்பு -அசாம் அரசு அதிரடி சட்டம்
பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடிப்பு -அசாம் அரசு அதிரடி சட்டம் Posted on 31-Jul-2018 பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடிப்பு -அசாம் அரசு அதிரடி சட்டம்

அசாம், ஜூலை 31-

பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை உரிய முறையில் பராமரிக்காத அரசு ஊழியர்களுக்கு 25 சதவீதம் வரை சம்பளத்தில் பிடித்தம் செய்யும் சட்டத்தை அசாம் மாநில பாஜக அரசு கொண்டு வருகிறது.

வயதான பெற்றோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் அசாம் மாநில அரசு புதிய சட்டம் கொண்டு வருகிறது. இதன்படி, அசாம் மாநில அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோரை வீட்டில் தங்களுடன் வைத்து பராமரிக்காமல், வீட்டை விட்டு வெளியேற்றினால் அவர்களை தண்டிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
பெற்றோரை உரியமுறையில் பராமரிக்காமல் கைவிடும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதத்தை பிடித்தம் செய்து, அதனை பெற்றோருக்கு வழங்க இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

அதுபோலவே மாற்றுத்திறனாளி குழந்தைகளை கவனிக்காமல் அவர்களை அனாதை இல்லங்களுக்கு அனுப்பினால் கூடுதலாக 15 சதவீத சம்பவளத்தை பிடித்தம் செய்யவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2&ம் தேதி இந்த சட்டம் அசாம் மாநிலத்தில் அமலுக்கு வரவுள்ளது.

இதுகுறித்து அம்மாநில அமைச்சர் ஹிமானந்த் பிஸ்வா சர்மா கூறுகையில் ‘‘வசதியில்லாத பெற்றோரை காக்க வேண்டிய கடமை ஒவ்வொருவரின் கடமை. அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தர வேண்டும். அவ்வாறு தவரும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்து பெற்றோருக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோருக்கும் இந்த உத்தரவு பொருந்தம்’’ என்றார்.
நாட்டிலேயே முதன்முறையாக அசாம் மாநில அரசு இந்த சட்டத்தை கொண்டுவர உள்ளது குறிப்பிடத்க்கது.

Label