OUR CLIENTS
உணர்வுபூர்வமான நிகழ்ச்சிகளை அரசியல் ஆக்காதீர்கள் எதிர்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்
உணர்வுபூர்வமான நிகழ்ச்சிகளை அரசியல் ஆக்காதீர்கள் எதிர்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் வேண்டுகோள் Posted on 31-Jul-2018 உணர்வுபூர்வமான நிகழ்ச்சிகளை அரசியல் ஆக்காதீர்கள் எதிர்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

புதுடில்லி, ஜூலை 31-

வட கிழக்கு அசாமில், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பலர் சட்டவிரோதமாக குடியேறுவதாகவும், தேர்தல்களின் போது அவர்கள் முறைகேடாக வாக்களிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் சட்டபூர்வ குடிமக்களை அடையாளம் காண, குடிமக்களுக்கான வரைவு தேசிய பதிவேடு வெளியிடப்பட்டது. 

இதில் அசாமில் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் குடிமக்களாக கருதப்படுபவர்கள் என மொத்தமுள்ள 3 கோடியே 29 லட்சம் பேரில், 2 கோடியே 89 லட்சம் பேரின் பெயர்கள் மட்டுமே உள்ளன. 40 லட்சம் பேர் குடிமக்கள் பெயர் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர லோக்சபாவில் திரிணாமுல் காங்., எம்.பி., சவுகாதா ராவ் நோட்டீஸ் அளித்திருந்தார்.அவை துவங்கியதும் இது தொடர்பான பிரச்னையை எழுப்பி திரிணால் காங்., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இது உச்சநீதிமன்ற கண்காணிப்பில் இருப்பது. இதில் மத்திய அரசின் பங்கு எங்கு உள்ளது என எதிர்கட்சிகள் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு எப்படி பொறுப்பாக முடியும். இது போன்ற உணர்வுபூர்வமான நிகழ்ச்சிகளைகளை அரசியல் ஆக்காதீர்கள் என்றார்.

Label