OUR CLIENTS
ஜெயலலிதா கொண்டு வந்த தொழில் திட்டங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போன பரிதாபம்!
ஜெயலலிதா கொண்டு வந்த தொழில் திட்டங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போன பரிதாபம்! Posted on 31-Jul-2018 ஜெயலலிதா கொண்டு வந்த தொழில் திட்டங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போன பரிதாபம்!

வேலூர், ஜூலை 31-

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா கொண்டு வந்த தொழில் திட்டங்கள் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் போயுள்ளது. தொழில் துறையிலும் மிகவும் பின்தங்கியுள்ளது தமிழ்நாடு என்றே சொல்லலாம்.

தமிழகத்தில் உள்ள மக்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல வழிகளில் அனுபவம் வாய்ந்தவர்களிடம் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வந்தார். அவர்கள் சொல்லும் நல்ல கருத்துக்களை பதிவு செய்து வந்தார். காரணம் என்னவென்றால் கடந்த 1977ம் ஆண்டு அதிமுக முதலில் ஆட்சியை பிடிக்கும்போது எம்ஜிஆரின் திட்டம் என்னவென்றால் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும். அதை மட்டும் சரியாக செய்தால் தமிழக மக்களை மட்டும் அவ்வாறு இந்தியாவில் வாழும் அத்தனை மக்களுக்கும் பெரிய உதவிகரமாக இருக்கும் என்ற கருத்தை ஜெயலலிதாவிடம் எம்ஜிஆர் பல நேரங்களில் நேரடியாக பேசி வந்ததாக ஒரு தகவல் அழுத்தமாக பதிவாகியிருக்கிறது. 

அதை மனதில் பதியவைத்த ஜெயலலிதா கடந்த 1991ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்பு தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகப்படியாக வேலைவாய்ப்பு தர வேண்டும் என்ற எண்ணத்தில் விரிவாக பேசி வந்தார். அந்த காலகட்டத்தில்தான் வெளிநாட்டில் வாழ்கின்ற இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வசதி வாய்ப்புகளை செய்து தருவதாக ஒரு கருத்தை வெளியிட்டார். 

அது காட்டுத்தீயைப்போல் பரவினாலும் அந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டு பணம் படைத்தவர்கள் யாரும் முன் வரவில்லை. காரணம் மத்தியில் ஆளுகின்ற ஆட்சியாளர்களிடம் ஜெயலலிதாவின் திட்டத்தை யாரும் சரியாக கொண்டு சேர்க்கவில்லை. அந்த காலகட்டத்தில் நடந்து முடிந்த வரலாற்றை ஆய்வு செய்ய தொடங்கினார். ஜெயலலிதா மூன்று தலைமுறைகளுக்கு மேலாக தமிழ்மண்ணில் பிறந்தவர்கள்தான் இலங்கை, பர்மா, மலேசியா, பாங்காக், ஹாங்காங், சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகள் முன்னேற தமிழனின் கடுமையான உழைப்புதான் அந்த நாட்டுக்கு அன்னிய செலாவணியை மீட்டு தந்ததே. 

இதை மறைப்பதற்காகதான் இங்கிருந்து சென்றவர்களுக்கு அந்த நாட்டில் குடியுரிமையை தந்து அந்த நாட்டு மக்களாக மாற்றி கொண்டார்கள். பர்மாவில் வாழுகின்ற மக்கள் நான்கு தலைமுறையாக எந்த உரிமைகளை பெற முடியாமல் அங்கு நடக்கும் ராணுவ ஆட்சிக்கு இன்றுவரை கட்டுப்பட்டுத்தான் வாழுகிறார்கள். அடுத்து இலங்கை இங்கு தமிழர்களின் கடுமையான உழைப்பால் குட்டித்தீவை சொகுசு வாழ்க்கையை தேடி சென்றது நாளுக்கு நாள் தமிழன் முன்னேறினான். அவன் உரிமையை கேட்க தொடங்கி விட்டான். இனி நாம் தாமதித்தால் இலங்கையே தமிழனுக்கு சொந்தமாகிவிடும் என்ற முடிவோடு அன்று இலங்கையின் ஆட்சியாளராக இருந்த ஸ்ரீமான் திருமதி பண்டார நாயகே, நேருவுடன் தொடர்பு கொண்டு ஒருமுறை இருவரும் தனிமையில் சந்தித்தார்கள். இதை அறிஞர் அண்ணா விமர்சனம் செய்தார். தமிழனுக்கு ஆபத்து வர இருக்கிறது என்பதை அழுத்தமாக மேடைகளில் பேசிவந்தார்.

1975ம் ஆண்டு இந்திய அரசாங்கம் கொண்டு வந்த அவசர சட்டத்தால் (எமர்ஜென்சி) தமிழ்நாட்டில் வாழுகின்ற தொழில் அதிபர்கள் பலர் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு இடம் பெயர்ந்தார்கள். அதில் ஒரு தமிழன்தான் அரபுநாடான துபாய்க்கு சென்று அந்த நாட்டின் வளர்ச்சியில் அக்கரையோடு அந்த நாட்டின் அனுமதியோடும் தொழில் தொடங்கியதால் ஏகப்பட்ட தமிழர்களுக்கு இங்கு வேலை வாய்ப்பை 43 ஆண்டுகளாக வாங்கி தந்ததால் அங்கு சென்ற தமிழர்கள் பலர் அங்கேயே வாழுகிறார்கள். 

அதேநேரம் கேரளாவை சார்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கேரள மக்களுக்காக கடுமையாக உழைத்து இன்றுவரை கேரளாவின் முன்னேற்றத்துக்காக அவர் மறைந்த பின்பும் இ.அகமதுவை பாராட்டி கொண்டிருக்கிறார்கள். இதுஒருபுறம் இருந்தாலும் வெளிநாட்டுக்கு சென்றவர்கள் பல பேர்கள் தொழில் அதிபராக உயர்ந்த நிலையில் இருந்தும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க யாருமே வந்தபாடில்லை. இதையெல்லாம் ஆய்வு செய்து ஜெயலலிதா ஒரு நல்ல முடிவை எடுத்தார்.

வெளிநாட்டில் வாழும் தொழிலதிபர்கள் யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் தொழில் செய்ய வாருங்கள். அதற்கு வேண்டிய அத்தனை வசதிகளையும் செய்து தருவதாக உறுதிமொழி அளித்து உலக அரங்கில் பலநாட்டைச் சேர்ந்த
தொழிலதிபர்களை தமிழ்நாட்டுக்கே வரவழைத்து அவர்கள் உடன் கலந்து பேசி நீங்கள் எந்த தொழில் செய்தாலும் உங்களுக்கு வேண்டியதை நான் முழுமையாக செய்து தருகிறேன் என்று ஜெயலலிதா உறுதிமொழி அளித்து அவர்களின் முன்னிலையிலேயே பேசிய வரலாறை யாரும் மறந்திருக்க முடியாது.

அந்த காலகட்டத்தில்தான் இதற்கு தகுதியான நபர் யார் என்பதை பெரியளவு ஆய்வு செய்து இன்றைக்கு மின்சாரத்துறை அமைச்சராக உள்ள தங்கமணியை தேர்வு செய்தார். அவரிடம் சில விஷயங்களை மனம்விட்டு பேசினார் ஜெயலலிதா. உடன் ஐஏஎஸ் அதிகாரியான ஷீலா பாலகிருஷ்ணன் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் யார் தொழில் தொடங்க வந்தாலும் அவர்களுக்கு வேண்டிய வசதிகள் அனைத்துமே நாமே செய்து தர வேண்டும். அதற்காக சென்னை மாநகராட்சி பெருநகர மேயராக இருந்த சைதை துரைசாமியை அழைத்து அரசுக்குச் சொந்தமான நத்தம், புறம்போக்கு, பட்டா இடங்களை முழுமையாக கைப்பற்றுங்கள். வெளிநாட்டுக்காரர்கள் தங்களின் அலுவலகங்கள் அமைய தொழில் செய்ய தேவையான இடங்களை ஒதுக்கித்தர தயக்கம் காட்டாதீர்கள். 

அவர்கள் தொழில் செய்யத் தொடங்கினால் இங்கு படித்தவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு தானாகவே வந்து விடும். அவ்களின் தொழிற்சாலையில் தயாரிக்கும் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய மத்திய அரசிடம் நாம் அனுமதி பெற்று தந்துவிடலாம். அவர்கள் முதலீடு செய்யும் தொகைக்கு அதிகளவு பணம் தேவைப்பட்டால் நாம் அரசு வாயிலாக கொடுக்க சட்ட ஆலோசகர்களை கலந்து முடிவு செய்யுங்கள் என்று ஜெயலலிதா போட்ட உத்தரவை அத்தனை நாட்டு பிரதிநிதிகளும், தொழிலதிபர்களும் முழுமையாக ஏற்றுக் கொண்டார்கள். இதற்காக ஒரு பெரும் தொகையை ஒதுக்கி வைத்ததாகவும் தகவல்கள் கூறுகிறது. 

தமிழகத்தில் தொழில் தொடங்க வந்தவர்களை வரவேற்ற ஜெயலலிதா இன்றைக்கு நம்மிடம் இல்லை. ஆனால் அவர் வகுத்து கொடுத்த திட்டம் அப்படியே இருக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் வரும் என்று அத்தனை கட்சிகளும் ஒரே அணியில் நின்று ஜெயலலிதாவை எதிர்த்தபோது துணிச்சலாக நான் தனித்து நிற்பேன் என்று அறிவித்தவுடன் அதிமுக தனித்து நின்று 135 இடங்களை கைப்பற்ற வாய்ப்புகள் இருப்பதாக உளவுத்துறை எஸ்பிசிஐடி அதிகாரிகள் அழுத்தமாக நம்பினர். இதை தெரிந்து கொண்ட எதிர்கட்சிகள் தேர்தல்
ஆணையத்தை மாற்ற வேண்டும். உளவுத்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை திமுக தலைவர்கள் அழுத்தமாக முன் வைத்தனர். அதையும் ஏற்றுக் கொண்டு அவர்கள் சொன்னதுபோல அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இறுதியாக அதிமுக வெற்றி பெற்றது. 

இந்நிலையில் வர இருப்பது மக்களவை தேர்தல். அடுத்து வர இருப்பது உள்ளாட்சி மன்ற தேர்தல் 2021ம் ஆண்டுதான் சட்டமன்ற தேர்தலே வர இருக்கிறது. இதை மறந்து ஜெயலலிதா மரணத்துக்கு பின்னால் ஏகப்பட்ட போராட்டங்கள் அரசு அதிகாரிகள் கொஞ்சம் கூட ஓய்வு எடுக்கவே இல்லை. அத்தனை போராட்டங்களும் நடந்து முடிந்து விட்டது. எதிர்கட்சிகள் வெற்றி கண்டார்களா என்ற கேள்விக்கு பதில் சொல்ல ஆளே இல்லை. இதுஒருபுறம் இருந்தாலும் கூட அந்நியநாட்டு முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருவதாக தகவல்களை தந்து கொண்டிருக்கிறார்கள். 

ஜெயலலிதா போட்ட திட்டம் என்றைக்குமே தோல்வி கண்டதில்லை. எனக்கு பின்னால் கூட இந்த அதிமுக அரசு 100 ஆண்டுகள் ஆட்சி செய்யும் என்று ஜெயலலிதாவின் வாக்கு தெய்வ வாக்காக வெற்றி நடைபோட்டு வந்த வண்ணம் இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கூட இந்த ஆட்சி 100 ஆண்டு காலம் இருக்கும் என்ற நம்பிக்கையை மனதில் சுமந்து கொண்டு மக்கள் நல்வாழ்வுக்காக அனைத்து அமைச்சர்களும் ஒற்றுமையுடன் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். அன்று சசிகலாவை பொதுச்செயலாளராக ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ஒப்புக் கொண்டனர். பின்பு சசிகலாவை நீக்கும்போது 95 சதவீத மக்கள் நிர்வாகிகள் ஆதரிக்கவில்லை என்பதை சற்று திரும்பி பார்க்க வேண்டும். 

கடந்த 1977ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எம்ஜிஆர் தனித்து நின்று ஆட்சியை கைப்பற்றினார். பின்னர் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாயை ஆதரித்தார். இதுவும் தமிழக
மக்களுக்காகத்தான் என்று விளக்கமளித்தவர் எம்ஜிஆர். அதே வழியில்தான் இன்றைக்கும் தமிழகத்தில் ஆட்சி செய்யும் அதிமுக மத்திய அரசை நிபந்தனையின்றி ஆதரித்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் யாரையும் பிரதமர் வேட்பாளர் என்று அடையாளம் காட்டாமல் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை வெற்றி கண்ட ஜெயலலிதாவை இந்திய வரலாறு என்றைக்குமே மறக்காது. 

வரும் மக்களவை தேர்தலிலும் இதே நிலைதான் தொடர உள்ளது.. இதுதான் நாளை நடக்கும் உண்மை நிகழ்வாகும். இதேபோன்று தமிழகத்தில் அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வர உள்ளார்கள். அவர்களை தங்கமணியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வரவேற்க பல திட்டங்களை ஜெயலலிதா சொன்னது போல தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள். இனி என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label