OUR CLIENTS
விரைவில் 8ம் வகுப்பு வரை ‘டேப்லட்’ வாயிலாக பாடம்! கல்வியை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி!
விரைவில் 8ம் வகுப்பு வரை ‘டேப்லட்’ வாயிலாக பாடம்! கல்வியை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி! Posted on 31-Jul-2018 விரைவில் 8ம் வகுப்பு வரை  ‘டேப்லட்’ வாயிலாக பாடம்! கல்வியை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி!

கடலூர், ஜூலை 31-

கடலூர் மாவட்டத்தில் 268 அரசு, நகராட்சி, ஆதி திராவிட நடுநிலைப் பள்ளிகளுக்கு கையடக்க கணினி(டேப்லட்) வழங்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, நவீன தொழில் நுட்பத்தில் பாடம் நடத்த பள்ளிகளில் ‘டேப்லட்’ எனப்படும் கைடயக்க கணினியை பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 268 அரசு, நகராட்சி, ஆதிதிராவிட நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ஒரு கையடக்க கணினி வீதம் மொத்தம் 268 கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. கையடக்க கணினி பயன்படுத்துவது குறித்து அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, பரங்கிப்பேட்டை, கம்மாபுரம், காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், குமராட்சி, மங்களூர், நல்லூர், விருத்தாசலம் உள்ளிட்ட 13 வட்டாரங்களில் இன்றும், நாளையும் இரண்டு கட்டங்களாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாவட்டத்தில் 268 நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ஒரு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பாடங்கள் நடத்தப்படும். தமிழக அரசு புதிய பாடத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில், இடம் பெற்றுள்ள கியூ.ஆர்., கோடை கையடக்க கணினி மூலமாக ஸ்கேன் செய்து, பாடங்கள் நடத்துவது மட்டுமின்றி கேள்விகள் கேட்கலாம். மேலும், மாணவர்களின் வருகையை பதிவேற்றம் செய்யவும் கையடக்க கணினி பயன்படுத்தப்பட உள்ளது.

கையடக்க கணினி பயன்படுத்துவது குறித்து கருத்தாளர்கள் சென்னையில் பயிற்சி பெற்றனர். இவர்கள், ஆசிரியர்களுக்கு இரண்டு கட்டங்களாக பயிற்சி அளித்து முடித்ததும், 1ம் தேதி முதல் பள்ளிகளில் கையடக்க கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும்‘ என்றார்.

Label