OUR CLIENTS
கருணாநிதியை விமர்சித்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி
கருணாநிதியை விமர்சித்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி Posted on 02-Aug-2018 கருணாநிதியை விமர்சித்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி

புதுடெல்லி, ஆக. 2-

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு டுவிட்டரில் கருணாநிதியை விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திமுக தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். கருணாநிதி உடல்நலம் குன்றிய முதல் நாளே துணை முதலமைச்சர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். அதே போன்று காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் கருணாநிதி நலம் பெற வேண்டும் என கூறி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் காவிரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.

இவ்வாறாக தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பலரும் கருணாநிதி விரைவில் நலம் பெற்று எழுந்து வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் கருணாநிதியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மார்கண்டேய கட்ஜூ டுவிட்டரில், ”மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வரும் கருணாநிதி மீது தமிழர்கள் அதிகமாக பரிதாபப்படுகிறார்கள். ஆனால் கருணாநிதி அரசியலுக்கு வருவதற்கு முன்பும், வந்த பிறகும் அவரது சொத்து மதிப்பு என்ன? அவரது மனைவிகள், வாரிசுகள் ஸ்டாலின், கனிமொழி, மாறன் பிரதர்ஸ் மற்றும் அவரது உறவினர்களின் சொத்து மதிப்பு என்ன? காமராஜ் இறக்கும் போது அவரிடம் ஒன்றும் இல்லை. என்ன ஒரு வேறுபாடு” என்று பதிவிட்டிருந்தார்.

Label