OUR CLIENTS
தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்கள் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர்!
தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்கள் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர்! Posted on 02-Aug-2018 தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்கள் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர்!

விழுப்புரம், ஆக.2-

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொருவளூர், பொரசப்பட்டு, ஈருடையாம் பட்டு, சவேரியார்பாளையம், மைக்கேல்புரம், பாக்கம், புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும்.

இப்பகுதி விவசாயிகள் ஏரி மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி நெல், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தனர்.
இந்த நிலையில் போதிய மழையின்றி ஏரிகள் வறண்டதால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இப்பகுதி விவசாயிகள் கிணற்று பாசனத்தை நம்பி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்தனர். பின்னர் கிணற்று தண்ணீர் மூலம் பாசனம் செய்து பராமரித்து வந்தனர். நெற்பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து வந்த நிலையில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால், கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டன.

இதனால் பயிர்களுக்கு முழுமையாக தண்ணீர் பாய்ச்ச முடியாததால், விவசாயிகள் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் அனைத்தும் கருகின. இதனால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கால்நடைகளை மேய்ச் சலுக்காக விட்டுள்ளனர்.

இதேபோல் மூங்கில் துறைப்பட்டு பகுதியில் பல இடங்களில் சாகுபடி செய்யப் பட்டிருந்த நெற்பயிர்கள் கருகி வருகின்றன. அதிகம் செலவு செய்து பராமரித்து வந்த நெற்பயிர்கள் தங்கள் கண் முன்னே கருகி வருவதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மீதமுள்ள பயிர்களை காப்பாற்ற மழை வருமா? என ஏக்கத்துடனும், கண்ணீருடனும் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Label