OUR CLIENTS
ஆழ்துளைக் குழாயை சீரமைக்க வலியுறுத்தல்!
ஆழ்துளைக் குழாயை சீரமைக்க வலியுறுத்தல்! Posted on 02-Aug-2018 ஆழ்துளைக் குழாயை சீரமைக்க வலியுறுத்தல்!

மாமல்லபுரம், ஆக.2-

மாமல்லபுரத்தை அடுத்துள்ள கழனிப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆழ்துளைக் குழாய் துருப்பிடித்து உடைந் திருப்பதால் குடிநீர் வசதியின்றி தவிக்கும் அந்த கிராமத்து மக்கள் அக்குழாயைச் சீரமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

கழனிப்பாக்கம் கிராமத்தில் 2500-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். முழுவதும் விவசாயத்தையே நம்பி மக்கள் வாழ்ந்து வரும் இந்த கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லை. 
மலைப்பாங்கான பகுதியில் உள்ள இக்கிராமத்தில் நிலத்தடி நீர் வருவதில்லை. நிலத்தடி வராத காரணத்தால் திருநிலை ஊராட்சி நிர்வாகம் 2 ஆழ்துளைக் குழாய்களை அமைத்துக் கொடுத்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஆழ்துளைக் குழாய்கள் மூலம் தண்ணீர் அடித்து சேகரித்து, குடிநீராகப் பயன்படுத்தி வந்தனர்.

அவ்வாறு அமைக்கப்பட்ட ஒரு ஆழ்துளைக் குழாய் துருப்பிடித்தும் ஓட்டை விழுந்தும் சேதமடைந்துள்ளது. அந்தக் குழாய் திருநிலை ஊராட்சி சாலையில் செல்லும் வழியில் உள்ளது. அது சேதமடைந்ததால் தண்ணீர் வருவதில்லை.  இதனால் அந்த கிராமத்தில் ஒரு பகுதியில் உள்ளவர்கள் குடிநீர் வசதியின்றி தவித்து வருகின்றனர். எனவே குடிநீருக்கு வழியின்றி இருக்கும் இந்தப் பகுதியில் சேதமடைந்துள்ள இந்தக் குழாயை திருநிலை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு சீரமைக்க வேண்டும் என கழனிபாக்கம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label